ஆஸ்துமா ஒன்றும் தீராத நோய் அல்ல , தொடர் சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோயாளிகளும் மற்றவர்கள் போல சாதாரணமாக வாழ முடியும்: மருத்துவர் செந்தில் குமார்.
ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பான ஜினா அமைப்பின் முதல் கூட்டம் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது.
ஆஸ்துமா என்பது என்ன?
ஆஸ்துமா என்பது நுரையீரலில் தொடர்ந்து ஏற்படக்கூடிய ஒவ்வாமை காரணமாக உண்டாகும் ஒரு வித இளைப்பு நோய். உலக சுகாதார அமைப்பு கடந்த 2019 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உலக மக்கள் தொகையில் 262 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விருதுநகரை சேர்ந்த மருத்துவர் செந்தில் குமார் பேசுகையில் ஆஸ்துமா என்பது பெரும்பாலும் மரபியல் ரீதியான வரக்கூடிய நோய். தாய் தந்தை வழியில் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு அதிகம். அதை தவிர்த்து காற்று மாசு, தூசு, புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரக்கூடும். நோய் வந்தவர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்படும். இது மாறுபடலாம் இதை நுரையீரல் பரிசோதனை மூலமாகவே உறுதி செய்ய முடியும்.
ஒருவருக்கு ஆஸ்துமா அல்லது இளைப்பு நோய் வந்துவிட்டால் அவ்வளவு தான் என்று நினைக்கின்றனர் ஆனால் உண்மையில் முறையான தொடர்ச்சியான சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோயாளிகளும் சாதரணமான மக்கள் போல வாழ முடியும். இன்று இன்ஹெல்லர், ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் ஆஸ்துமாவுக்கு வந்துவிட்டன. ஆகையால் ஆஸ்துமா ஒன்றும் தீராத வியாதி அல்ல என்று தெரிவித்தார்.
ஆஸ்துமாவில் இறப்பு விகிதம் குறைவு என்றாலும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே வருங்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தலாம். வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ளுதல், புகைபிடித்தலை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்றினாலே ஆஸ்துமா வராமல் ஒரளவு தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar