ஹோம் /விருதுநகர் /

Virudhunagar | தீபாவளிக்கு எங்களையும் கொஞ்சம் ஆதரியுங்கள்- சாலையோர வியாபாரியின் வேண்டுகோள்

Virudhunagar | தீபாவளிக்கு எங்களையும் கொஞ்சம் ஆதரியுங்கள்- சாலையோர வியாபாரியின் வேண்டுகோள்

விருதுநகர்

விருதுநகர் சாலை வியாபாரிகள்

Virudhunagar | தீபாவளிப் பண்டிகை நாளை சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது வரை தீபாவளி விற்பனை களைகட்டிவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 24 திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக உள்ளது.

தீபாவளியைக் கொண்டாட தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முக்கிய கடைவீதிகள் மக்களால் நிரம்பி வழிகின்றன. தற்போது தீபாவளியோடு பருவமழையும் தொடங்கிவிட்டது. ஆனாலும் வெயிலும் குறையவில்லை. இப்படி வெயிலும் மழையும் வாட்டி வதைத்தாலும் மக்கள் அதையும் பொருட்படுத்தாமல் தீபாவளிக்கு தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர்.

விருதுநகரை பொருத்தவரை பர்சேஸ் என்றாலே மக்கள் அதிகம் செல்லும் இடம் பொட்டல் தான். இதை விருதுநகரின் ஷாப்பிங் சென்டர் என்றால் கூட ஆச்சரியம் இல்லை. ஏனெனில் பண்டிகைக்கு தேவையான துணிகள், நகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

விருதுநகர் சாலையோர விற்பனைக் கடைகள்

இந்தாண்டு நிறைய சிறு வியாபாரிகள் தீபாவளிக்கு கடை விரித்துள்ளனர். நிறைய துணி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள் வந்துள்ளன. பண்டிகை நெருங்கி விட்டதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

சாலையோர வியாபாரிகள்

பொட்டலில் கடை வைத்துள்ள சிறு வியாபாரி அழகு ராஜிடம் இந்த வருடம் வியாபாரம் எப்படி போகின்றது என கேட்ட போது, ’சென்ற ஆண்டை விட மக்கள் கூட்டம் சற்று குறைவு தான். மக்கள் கூட்டம் ஓரளவு இருந்தாலும் வியாபாரம் பெரிதாய் இல்லை என்று கூறினார். மேலும் பொதுமக்கள் தங்களை போன்ற சிறு வணிகர்களிடமும் பொருட்கள் வாங்கி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நாம் தீபாவளி கொண்டாட இந்த மாதிரி சிறு வியாபாரிகளிடம் எதாவது ஒரு பொருள் வாங்கினால் தான் அவர்களுக்கு தீபாவளி. பெரிய கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தான் தரமானதாக இருக்கும் என்றில்லை. சிறு வியாபாரிகளிடமும் தரமான பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் இந்த தீபாவளிக்கு சிறுவியாரிகளிடமும் எதாவது ஒரு பொருள் வாங்கி அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்வோம்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar