Home /virudhunagar /

விருதுநகரில் நாளை இங்கெல்லாம் பவர் கட் - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க...

விருதுநகரில் நாளை இங்கெல்லாம் பவர் கட் - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால் வரும் 12ஆம் தேதி அந்தப் பகுதியில் மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை மாற்றி அமைக்கும் பணி செப்டம்பர் 12ஆம் தேதி (திங்கட்கிழைமை) நடைபெறவுள்ளது.

    இதன் காரணமாக, அல்லம்பட்டி, காந்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் டால்பின் நகர். அனுமன் நகர், சங்கரேஸ்வரி கோவில் தெரு. காமராஜ்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி