Home /virudhunagar /

விருதுநகரில் நாளை இந்த இடங்களில் மின்தடை

விருதுநகரில் நாளை இந்த இடங்களில் மின்தடை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் அருகே எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    விருதுநகர் அருகே எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எரிச்சநத்தம் துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய நிர்வாக பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, கொங்கன்குளம், சிலார்பட்டி, முருகனேரி, சவ்வாஸ்புரம், கோட்டையூர், அக்கனாபுரம், அழகாபுரி, மேல கோட்டையூர், ஆயர்தர்மம், சுப்புலாபுரம், சுரைக்காய் பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி