Home /virudhunagar /

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Srivilliputhur, India
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு துணை மின் நிலையம், வலையப்பட்டி, கூமாப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) 13 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு துணை மின் நிலையம், வலையப்பட்டி, கூமாப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு துணை மின் நிலையம், வலையப்பட்டி, கூமாப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    வத்திராயிருப்பு, வலையப்பட்டி, சரந்தாங்கி, கூமாப்பட்டி உள்ளிட்ட துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி