Home /virudhunagar /

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajapalayam, India
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி, சூலக்கரை துணை மின்நிலையங்களில் நாளை (சனிக் கிழமை) 3ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி, சூலக்கரை துணை மின்நிலைய மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9. மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி, சூலக்கரை துணை மின்நிலையங்களில் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்நிலையத்தினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை, வேப்பங்குளம், சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் வளாகம், போலீசார் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாடர்ன் நகர், மாத்தி நாயக்கம்பட்டி ரோடு, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி