Home /virudhunagar /

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajapalayam, India
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி உபமின் மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர். ரெட்டியபட்டி உபமின் மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், வேப்பங்குளம், வி.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னி தேவன்பட்டி, அட்டைமில் முக்கு ரோடு, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர் உள்ளிட்ட பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி