Home /virudhunagar /

Virudhunagar | முன்னோர்கள் சாபம் தீர்க்கும் திருச்சுழி திருமேனி நாதர் கோவில் - வரலாறு தெரியுமா?

Virudhunagar | முன்னோர்கள் சாபம் தீர்க்கும் திருச்சுழி திருமேனி நாதர் கோவில் - வரலாறு தெரியுமா?

திருமேனி

திருமேனி நாதர் கோவில்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் புகழ்பெற்ற பாண்டியர் காலத்து பூமிநாதர் கோவில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Aruppukkottai, India
திருமேனி நாதர் கோவில் வரலாறு:

திருமேனி நாதர் கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என நம்பப்படுகின்றது. முன்காலத்தில் இந்த திருச்சுழி பகுதி திருச்சுழியல் என்றழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இங்குள்ள குண்டாற்றில் பிரளய வெள்ளம் ஏற்படவே சிவபெருமான் மக்களை காக்க பூமியில் துளையிட்டு அந்த வெள்ளத்தை சுழித்து பூமிக்குள் செலுத்தினார்.

அதனால் இந்த பகுதி சுழியல் என்று அழைக்கப்பட்டு முன்னர் திரு எனும் அடைமொழி சேர்த்து திருச்சுழியல் என்றழைக்கப்பட்டது. பின்னர் அதுவே திருச்சுழி என்றானது. அதனால் இப்பகுதியில் பாண்டிய மன்னன் சிவனுக்கு கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.

திருமேனி நாதர் கோவில்


கோவில் அமைப்பு:

கோவிலின் முன் பகுதியில் தெப்பக்குளம் அதன் எதிரே கல்மண்டபம் உட்பகுதியில் சிவன் மற்றும் அம்மனுக்கு தனி தனி சன்னதிகள் உள்ளன. இவை தவிர முருகன், விநாயகர், நடராஜர் இவர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. சிவன் கோயில் மேற்பகுதியில் காணப்படும் ஓவியங்கள் மிகவும் பழமையானது. மூலிகைகள் கொண்டு வரையப்பட்டுள்ளன.

திருமேனி நாதர் கோவில்


தனித்துவமாக இக்கோவிலில் மழைநீர் சேகரிப்பு வடிகாலும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மேற்பரப்பு மற்றும் தளத்தில் விழும் மழைநீர் தெப்பக்குளம் போய் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் சிறப்பு:

இந்த கோவில் தேவாலயம் பாடப்பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி எட்டு இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள மூலவர் கல்யாண கோலத்தில் உள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு வந்து மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் நீங்கி நலம் பெறலாம்.

சிவன் சன்னதி


இங்குள்ள லிங்கத்தை பூமாதேவி வழிபட்டதாக கூறப்படுகிறது. எனவே இந்த சிவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.
பழமையான இக்கோவில் தற்போது ராமநாதபுரம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திருமேனி நாதர் கோவிலுக்குச் செல்லும் கூகுள் மேப்:


பேருந்து வசதி:

விருதுநகர், அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருச்சுழி வந்து பூமிநாதர் கோவில் என்று கேட்டாலே அனைவரும் வழி சொல்வார்கள்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி