ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் பேருந்து நிலையம் இல்லாமல் தவிக்கும் திருச்சுழி மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகரில் பேருந்து நிலையம் இல்லாமல் தவிக்கும் திருச்சுழி மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சுழி

திருச்சுழி பேருந்து நிலையம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Aruppukkottai, India

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பேருந்து நிலையம் இல்லாத காரணத்தால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் சாலையிலே மக்களை ஏற்றி மற்றும் இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பேருந்துக்காக வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்கும் நிலையே உள்ளது.

இந்த நிலையில் திருச்சுழியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

சுற்றுலாத் தளம்:

தற்போது தனி சட்டமன்றத் தொகுதியாக உள்ள திருச்சுழியில் பிரசித்தி பெற்ற பூமிநாதர் கோவில் மற்றும் புகழ் பெற்ற ஆன்மீகவாதியான ரமணமகரிஷி பிறந்த வீடு உள்ளது. இதனால் இவற்றை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

திருச்சுழி பேருந்து நிலையம்

இந்த நிலையில் வளர்ந்து வரும் சுற்றுலாத் தளமாக விளங்கும் திருச்சுழியில் பேருந்து நிலையம் இல்லாத காரணத்தால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

திருச்சுழி பேருந்து நிலையம்

கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்காக நரிக்குடி சாலையில் உள்ள இடத்தை தேர்வு செய்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆனால் அதன் பின்னர் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் பழைய நிலையே தொடர்கின்றது. மக்களின் தேவையை புரிந்து கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை விரைவில் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar