ஹோம் /விருதுநகர் /

கொடுத்த புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? - விருதுநகரில் பொதுமக்களிடம் கேட்டறிந்த போலீஸ் எஸ்.பி

கொடுத்த புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? - விருதுநகரில் பொதுமக்களிடம் கேட்டறிந்த போலீஸ் எஸ்.பி

X
விருதுநகரில்

விருதுநகரில் குறைதீர் கூட்டம்

Virudhunagar District News : விருதுநகரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் காவல்துறை புகார்கள் மீதான பொதுமக்களின் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 20ம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தி குறிப்பில், இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் கடந்த மாதங்களில் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்த மனுக்கள் மீதான காவல் துறை நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை அல்லது இன்னும் தீர்வு காணப்படவில்லை எனில் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள முகாம்மிற்கு நேரில் வந்து தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : விருதுநகரில் சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்- ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

இந்நிலையில், முகாமிற்கு 96 மனுதாரர்கள் வந்திருந்த நிலையில், அவர்களின் குறைகளை தனித்தனியே கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar