ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவடத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவடத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை

மின்தடை

Virudhunagar district | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) இங்கு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலைய பகுதிகளில், நாளை (நவம்பர் 11) மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், நாளை இப்பகுதி பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க

அதன்படி, ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆறுமுகா மில் பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே எஸ். திருவேங்கடபுரம், சட்டி கிணறு, எஸ். திருக்கோதையாபுரம், சங்கம்பட்டி, அட்டை மில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar