ஹோம் /விருதுநகர் /

பாண்டிய நாட்டு நந்தினியா? சோழ நாட்டு குந்தவையா? பொன்னியின் செல்வன் பற்றி விருதுநகர் ரசிகர்கள் கருத்து என்ன?

பாண்டிய நாட்டு நந்தினியா? சோழ நாட்டு குந்தவையா? பொன்னியின் செல்வன் பற்றி விருதுநகர் ரசிகர்கள் கருத்து என்ன?

பொன்னியின்

பொன்னியின் செல்வன்

Virudhunagar Ponniyin selvan | பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு விருதுநகர் மாவட்டத்திலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

வரலாற்று கதை:

சுந்தர சோழரின் ஆட்சி முடிவுறும் தறுவாயில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சில கற்பனை கதாபாத்திரத்தை புகுத்தி அமரர் கல்கி எழுதிய கதை தான் இந்த பொன்னியின் செல்வன். இதை படமாக்கும் முயற்சிகள் எம்ஜிஆர் காலம் தொட்டே நடந்து வந்தன. ஆனால் இன்று தான் அந்த கனவு நிறைவேறியுள்ளது.

விருதுநகர் திரையரங்கில் ரசிகர்கள்

இப்படத்தை மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டு தற்போது முதல் பாகம் வெளியாகி உள்ளது. இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்றோர் நடித்துள்ளனர். இப்படம் ஏர் ஆர் ரகுமான் இசையில் லைகா நிறுவன தயாரிப்பில் வெளியாகி உள்ளது.

காலை முதலே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர துவங்கிவிட்டன.

சோழர்களின் படமான பொன்னியின் செல்வன் விருதுநகரிலும் வெளியாகி உள்ளது. வரலாற்றில் பாண்டிய நாட்டு பகுதியாக இருந்த விருதுநகரிலும் பொன்னியின் செல்வன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பார்த்த ரசிகர்களும் பாகம் இரண்டுக்கு காத்திருப்பதாகவும், சோழர்கள் கதை அருமையாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

குந்தவை vs நந்தினி:

பொன்னியின் செல்வன் கதையில் குந்தவை, நந்தினி என்ற இரு பெண்களின் கதாபாத்திரம் மிக முக்கியமான பங்கை வகிக்கும்.  படம் பார்த்த ரசிகர்களும் குந்தவை, நந்தினி என விவாதம் செய்யும் அளவுக்கு இருவரது நடிப்பும் உள்ளது.

நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள பொன்னியின் செல்வன் பாகுபலி அளவிற்கு வசூல் சாதனை படைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar