Home /virudhunagar /

உடன்கட்டை ஏறும் பெண்களுக்கு சிலை: வரலாற்றை சுமந்து நிற்கும் விருதுநகரில் காணப்படும் சதிகல்

உடன்கட்டை ஏறும் பெண்களுக்கு சிலை: வரலாற்றை சுமந்து நிற்கும் விருதுநகரில் காணப்படும் சதிகல்

விருதுநகர்

விருதுநகர் சதிகல்

உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையில் இருந்த காலத்தில் உடன்கட்டை ஏறி உயிர் விட்ட பெண்களுக்கு சதிகல் வைத்து வழிபடும் பழக்கமும் அந்த காலத்தில் இருந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையில் இருந்த காலத்தில் உடன்கட்டை ஏறி உயிர் விட்ட பெண்களுக்கு சதிகல் வைத்து வழிபடும் பழக்கமும் அந்த காலத்தில் இருந்துள்ளது.

சதியென்னும் உடன்கட்டை ஏறுதல்:

அன்றைய காலகட்டத்தில் கணவன் இறந்த பின்னர் கணவனை எரியுட்டும் தீயிலே விழுந்து மனைவி உயிர் விடும் பழக்கம் இருந்தது.
இதை தான் சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்பர்.
பொதுவாக இந்த உடன்கட்டை ஏறும் பழக்கம் வட இந்தியாவில் பரவலாக காணப்பட்டது. தென்னிந்தியாவில் அரச குடும்பங்களில் மட்டும் இந்த உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்துள்ளது. இதை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
தொல்காப்பியம் மற்றும் புறநானூறு இதை பற்றி கூறுகின்றன.

சதிகல்:

அவ்வாறு உடன்கட்டை ஏறும் பெண்களுக்கு ஒரு கல்லில் அவள் மற்றும் அவள் கணவனோடு சேர்ந்த சிற்பம் ஒற்றை செதுக்கி அந்த பெண்ணை தெய்வமாக வழிபடுவர். இதை தான் சதிகல் என்பர். இந்த சதிகல் நிறைய இடங்களில் பரவலாக காணப்படுகிறது. கேரளத்தில் இதை படைகல் என்பர்.

சதிகல் மண்டபம்


இந்த சதிகல்லில் அந்த வீரன் எப்படி இறந்தான் என்பது பற்றி குறிக்கப்பெற்றிருக்கும். பொதுவாக சதி கற்களில் ஒரு ஆண் ஒரு பெண் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால் சில சதிகற்களில் இரண்டு பெண்களுக்கு நடுவே ஒரு ஆண் இருப்பது போன்று இருக்கும்.

சேதமடைந்த நிலையில் சதிகல்


விருதுநகரில் சதிகல்:

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதியில் சதி கற்கள் காணப்படுதாக கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்த போது, ஒரு பழமையான மண்டபத்தில் இரண்டு சேதமடைந்த சதி கற்களை காணமுடிந்தது. அவை எந்த காலத்தை சேர்ந்தவை என்பது பற்றிய எந்த விபரமும் இல்லை. பராமரிப்பு இல்லாமல் இவை காலப்போக்கில் சிதைந்து விட்டதாக தெரிவித்தனர் அந்த ஊர் மக்கள்.

விருதுநகர் சதிகல்


அதே ஊரில் மற்றொரு சதிகல் பூஜைகள் செய்து வணங்கப்பட்டு வருகிறது. அங்கு சென்று பார்த்த போது, மேலே சொன்ன இரண்டு பெண்களுக்கு நடுவே ஒரு ஆண் இருப்பது போன்ற சதிகல்லை காணமுடிந்தது.

இங்கேயும் சதி பழக்கம் இருந்ததுள்ளது என்பதற்கு ஆதாரமாக இந்த சதி கற்கள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி