ஹோம் /விருதுநகர் /

மதுரை பள்ளி மாணவிக்கு கடிதம் அனுப்பிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - காரணம் என்ன தெரியுமா?

மதுரை பள்ளி மாணவிக்கு கடிதம் அனுப்பிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - காரணம் என்ன தெரியுமா?

விருதுநகர் கலெக்டர்

விருதுநகர் கலெக்டர்

Virudhunagar Collecter Letter : புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மதுரை மாவட்ட மாணவி ஒருவர் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அவருக்கு ஆட்சியர் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் நடைபெற்ற முதல் முறையாக நடைபெற்ற புத்தக திருவிழா சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், அதை சிறப்பாக நடத்தி முடித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் இந்து உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுமி கு.காவியதர்வினி மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து மடல் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் அவர் விருதுநகரில் முதல் புத்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த தங்களுக்கும் தங்களோடு பணியாற்றிய அலுவலர்களுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : முதல் பரிசாக ரூ.10 லட்சம்... விருதுநகர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அந்த வாழ்த்து மடலின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மாவட்ட ஆட்சியர், உடன் பதில் கடிதத்தையும் இனைத்திருந்தார். அதில் தங்களின் வாழ்த்து மடல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி, மாணவ செல்வங்களாகிய நீங்கள், வாழ்வில் லட்சியம் ஒன்றை கொண்டு, அதை அடைய முயற்சிக்கும்போது வரும் தடைகளை கடந்து வாழ்வின் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் என்றும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Local News, Virudhunagar