முகப்பு /விருதுநகர் /

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா... விருதுநகர் மக்கள் கருத்து இதுதான்..

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா... விருதுநகர் மக்கள் கருத்து இதுதான்..

X
ஏஜெண்ட்

ஏஜெண்ட் கண்ணாயிரம் ரிவியூ

Virudhunagar | நடிகர் சந்தானம் நடித்து வெளியாகியுள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புது புது படங்கள் வெளியாகி வரும் சூழலில் இந்த வெள்ளிக்கிழமை நடிகர் சந்தானம் நாயகனாக நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வெளியாகி உள்ளது.

டிடெக்டிவ் ட்ராமா:

மனோஜ் பீதா இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். தெலுங்கில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் தான் இந்த படம். நடிகர் சந்தானம் நாயகனாக இது வரை பல படங்களில் நடித்து இருந்தாலும் அவையெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.

ஏஜெண்ட் கண்ணாயிரம்

அதனால் இம்முறை நடிகர் சந்தானம் தெலுங்கு படத்தை கையில் எடுத்துள்ளார். இது குறித்து ஏற்கனவே அவர் வழக்கமான காமெடியை இதில் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் பேசியிருந்தார். காமெடி இல்லாமல் ஒரு டிடெக்டிவ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்தை அவர் பெரிதும் நம்யுள்ளார்.

இது குறித்து முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சிலரிடம் கேட்ட போது, ஒருசிலர் படம் ஒருமுறை பார்க்கும் அளவிற்கு தான் உள்ளது. ஏதோ செய்ய நினைத்து எதையோ செய்துள்ளனர் என்றனர்.

இன்னும் சில பேர் வழக்கமாக சந்தானம் படங்களில் காமெடியாவது மிஞ்சும். இப்படத்தில் அதுவும் இல்லை. ஏன் வந்தோம் என்றாகிவிட்டது என்று ஏமாற்றம் தெரிவித்தனர்.

top videos

    வழக்கமான பாணியை விட்டு புது முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் சந்தானம் இம்முறை வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை இனி வரும் விடுமுறை தினங்களை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.

    First published:

    Tags: Local News, Virudhunagar