முகப்பு /செய்தி /விருதுநகர் / விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதாக நோட்டீஸ்?... நீதிபதி அறிவிப்பால் பரபரப்பு!

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதாக நோட்டீஸ்?... நீதிபதி அறிவிப்பால் பரபரப்பு!

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

Virudhunagar Collector office auction | நீதிபதி உத்தரவின்பேரில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் 31ம் தேதி ஏலம் விடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு திருமங்கலம் முதல் சாத்தூர் இடையே நடந்த சாலை பணிகளை சவரிமுத்து என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வந்தார். 30 விழுக்காடு பணிகளை அவர் முடித்திருந்த நிலையில், திடீரென வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டது.

தனக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்ந்தார். 2 கோடியே 35 லட்சம் ரூபாய் தொகையை வழங்குமாறு 2002ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகை இன்னும் வழங்கப்படாத நிலையில் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். நீதிபதி உத்தரவின்பேரில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

top videos

    விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவின் பேரில் நீதிமன்ற பணியாளர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவற்றில் ஏல அறிவிப்பு நோட்டீஸை ஒட்டினர். மார்ச் 31 ஆம்தேதி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.

    First published:

    Tags: Local News, Virudhunagar