Home /virudhunagar /

பட்டாசு ஆலை அதிபர்களுக்கு விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை

பட்டாசு ஆலை அதிபர்களுக்கு விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை

பட்டாசு தயாரிப்பு

பட்டாசு தயாரிப்பு

Virudhunagar | விருதுநகரில் பட்டாசு ஆலை தொழிலதிபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்போா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 24ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஆன்லைன் வழியாக செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

    அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், கடவுச் சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம்(ஆதாா் அட்டை), அடையாள அட்டை(வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை , ஓட்டுநா் உரிமம்), உரிமக் கட்டணம் ரூ.500- ஐ அரசு கருவூல செலுத்துத் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு(அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

    செப்டம்பர் 30-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று ஏற்னவே விருதுநகர் ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி அறிவித்து இருந்தார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட ரசாயன மூலப் பொருள்களை கொண்டு பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, இரவு நேரங்களில் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளா்கள் ஈடுபடுகின்றரா, தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சட்ட விரோதமாக வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடந்த வட்டாட்சியர், தொழிலகப் பாதுகாப்பு துணை இயக்குநா், தீயணைப்பு நிலைய அலுவலா், காவல் சாா்பு- ஆய்வாளா் ஆகியோா் அடங்கிய 4 தனிப்படை அமைத்து ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.

    இந்த குழுவினா் செப்டம்பர் 25-ம் தேதி வரை தினமும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ச்சியாக விதிகளை மீறும் நபா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி