Home /virudhunagar /

பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பட்டாசு ஆலை விதிமீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்ட்டுள்ளதாக விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India
    தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட 30 சதவீத பட்டாசுகள் இந்த ஆண்டு குறைவாகவே உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபடுவர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவதால் உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படுகிறது. வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் பல முறை எச்சரித்தும் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் இனி பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் போது விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டை விட 30 சதவீத பட்டாசுகள் இந்த ஆண்டு குறைவாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி