ஹோம் /விருதுநகர் /

தோல்வி நிரந்தரமல்ல... காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விருதுநகர் ஆட்சியர் அறிவுரை

தோல்வி நிரந்தரமல்ல... காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விருதுநகர் ஆட்சியர் அறிவுரை

X
விருதுநகர்

விருதுநகர் ஆட்சியர்

Virudhunagar News | காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 25வது கலந்துரையாடல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல. விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம், தோல்வி நிரந்தரமல்ல என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் உரையாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் உரையாடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவ்வப்போது மாணவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 25வது கலந்துரையாடல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி மாணவர்களிடம் பேசிய ஆட்சியர் மேகநாத ரெட்டி  வாழ்க்கையில் வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல. விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம், தோல்வி நிரந்தரமல்ல என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மாணவர்களாகிய நீங்கள் பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு கல்வி தவிர ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கல்வி, அறிவியல், அரசியல் போன்ற துறைகளில் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை மாணவர்கள் ஆட்சியரோடு கலந்துரையாடி தீர்த்துக் கொண்டனர். இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

First published:

Tags: Local News, Virudhunagar