நவீன கால உலகில் உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவு என்ற காலம் வந்துவிட்டது. எதாவது சுவையாக சாப்பிடலாம் என்றால் அதில் நல்ல விஷயம் ஒன்றும் இருக்காது. சரி நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடலாம் என்றால் அதில் சுவை எதிர்பார்க்க முடியாது.
இப்படி இருக்கையில் சுவையும், ஆரோக்கியமும் சமரசம் இல்லாமல் சாப்பிட விரும்புவோர்க்கு ஒரு ரைட் சாய்ஸ் என்றால் அது தேங்காய் பூ தான்.விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் தள்ளுவண்டி கடையில் தேங்காய் பூ வியாபாரம் சிறப்பாக நடந்து வருகிறது.
தேங்காய் பூ:
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயின் கரு வளர்ச்சியே. தேங்காயை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் மூன்று மாதத்தில் லேசாக தேங்காய் முளைத்திருக்கும். அதை வெளியே எடுத்து உடைந்து பார்த்தால் உள்ளே இந்த தேங்காய் பூ இருக்கும்.
சுவையும் ஆரோக்கியமும்:
அதை அப்படியே சாப்பிடலாம். தேங்காய் மற்றும் இளநீரின் சுவையில் மிகவும் மிருதுவாக அற்புதமாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சுவை மட்டும் இல்லாமல் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது இந்த தேங்காய் பூ.
இதை சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் தேங்காய் பூ வியாபாரம் செய்து வரும் ராஜா கூறுகையில், ‘இந்த தேங்காய் பூக்கள் ஒசூரில் இருந்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாவும், சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தேங்காய் பூக்கள் அதன் உருவத்திற்கு ஏற்ப 20 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் இயற்கையான உணவு என்பதால் இதுவரை இதை சாப்பிடாதவர்கள் இனி வாங்கி முயற்சி செய்து பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar