ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்..

விருதுநகரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்..

X
கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விருதுநகரில் வண்ண விளக்குகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

இயேசு பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் புனித நாளாக கருதி கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டுவருகின்றனர்.

நாளை டிசம்பர் 25 என்பதால் விருதுநகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டது.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு டிசம்பர் 24ல் அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் நகரில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் வீதிகள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க ஆரம்பித்து விட்டது.

அலங்கரிக்கப்பட்ட சர்ச்

இன்னும் சிலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸை வரவேற்க தயாராகி வருகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு இன்னும் சில மணிநேரம் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே அதற்கான ஆட்டம் பாட்டம் தொடங்கி விட்டது.

செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.

First published:

Tags: Christmas, Local News, Virudhunagar