முகப்பு /விருதுநகர் /

12 ஆண்டுகளாக குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கி வரும் விருதுநகர் பாக்ஸிங் பயிற்சியாளர் 

12 ஆண்டுகளாக குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கி வரும் விருதுநகர் பாக்ஸிங் பயிற்சியாளர் 

X
விருதுநகர்

விருதுநகர் பாக்ஸிங் கிளப் 

Kick Boxing : விருதுநகர் பகுதி இளைஞர்கள் பாக்ஸிங் கற்றுக்கொள்ள வேண்டும் என ரபீக் ஹூசைன் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக பாக்ஸிங் கிளப் நடத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

பாக்ஸிங் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பஞ்ச் செய்து கொண்டு விளையாடும் ஒரு சர்வதேச விளையாட்டு. இந்த விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம் என்றாலும் இந்தியாவில் தற்போது தான் வளர்ந்து வருகிறது. மேரிக்கோம் போன்றோர் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் தான் இந்தியாவிலும் குத்துச்சண்டை வீரர்கள் இருக்கின்றனர் என அறிய முடிந்தது. இதே நிலை தான் தமிழ்நாட்டிலும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில் குத்துச்சண்டை பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. விருதுநகரை பொருத்தவரை நாமெல்லாம் குத்துச்சண்டையை தொலைக்காட்சியில் பார்த்ததோடு மட்டும் சரி.

விருதுநகர் பகுதி இளைஞர்கள் பாக்ஸிங் கற்றுக்கொள்ள வேண்டும் என கடந்த 12 ஆண்டுகளாக பாக்ஸிங் பயிற்றுவித்து வரும் விருதுநகரை சேர்ந்த ரபீக் ஹூசைன் என்பவர் தற்போது தனியே பாக்ஸிங் கிளப் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்து அவர்களை போட்டிகளுக்கு அழைத்து சென்று சாதிக்க வைத்து வரும் ரபீக் ஹூசைன் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு நம்ம ஊரில் இருந்து ஒருவரை உருவாக்க என்பதே லட்சியம் என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் குத்துச்சண்டையில் சாதிப்பது பற்றியும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கூறினார். குத்துச்சண்டை ஒரு தனிநபர் விளையாட்டு என்பதால் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் சாதிக்கலாம் என்று கூறியவர் இதன் மூலம் அரசு வேலை வாய்ப்புகளையும், பள்ளி கல்லூரிகளில் விளையாட்டு பிரிவுகளில் எளிதில் இடம் பெறலாம் என்றார்.

First published:

Tags: Local News, Virudhunagar