ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் புத்தகத் திருவிழா மாபெரும் வெற்றி - மனுஷபுத்திரன் மகிழ்ச்சி

விருதுநகர் புத்தகத் திருவிழா மாபெரும் வெற்றி - மனுஷபுத்திரன் மகிழ்ச்சி

X
மனுஷபுத்திரன்

மனுஷபுத்திரன்

Virudhungar | விருதுநகர் புத்தக திருவிழா கடந்த பதினோரு நாட்களாக நடந்து வந்த நிலையில் இறுதிநாள் நிகழ்வோடு கோலாகலமாக நிறைவு பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் முதன்முறையாக நடைபெற்ற மக்கள் ஆதரவுடன் பதினோரு நாட்களுக்கு இறுதி நாள் நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

முதல் புத்தக திருவிழா

விருதுநகரில் முதல் முறையாக புத்தக திருவிழா நடத்துவது என முடிவு செய்து, அதன்படி விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி மைதானத்தில் கடந்த நவம்பர் 17 ம் தேதி புத்தக திருவிழாவானது தொடங்கியது.

முதல் புத்தக திருவிழா என்பதால் மக்களின் கவனத்தை பெற பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை என பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

புத்தக திருவிழா 

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இறுதி நாளான நேற்றைய நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் புத்தக திருவிழா மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து பேசிய எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், ‘யாரும் எதிர்பாராத அளவிற்கு விருதுநகர் புத்தக திருவிழா மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இறுதி நாளில் மழை பெய்தநிலையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தக திருவிழா இறுதிநாள்

உண்மையான ஒரு திருவிழா போல இப்புத்தக திருவிழா இருந்தது. அதற்கேற்ப மக்களை ஈர்க்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலம் மக்களுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் அதிகரித்து சமூதாயத்தில் மாற்றம் ஏற்படும். இன்று விருதுநகரில் நடைபெற்ற முதல் புத்தக திருவிழா முதலாவது புத்தக திருவிழா போல இல்லை ஏதோ பத்து ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற புத்தக திருவிழா போல உள்ளது என்றார். மேலும் அவர் இம்மாபெரும் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு மனநிறைவோடு இங்கிருந்து விடைபெறுவதாக தெரிவித்தார்.

விழா நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, முதல் புத்தக திருவிழாவில் இதுவரை இரண்டு கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகவும் இதற்கு காரணமாக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar