முகப்பு /விருதுநகர் /

வீட்டில் உள்ள பொருட்களால் மேக்கப்.. விருதுநகரில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேக்கப் போட்டு உலக சாதனை!

வீட்டில் உள்ள பொருட்களால் மேக்கப்.. விருதுநகரில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேக்கப் போட்டு உலக சாதனை!

X
சாத்தூரில்

சாத்தூரில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேக்கப் போட்டு உலக சாதனை 

Sathur world record | உணவும் அழகே என்பதை வலியுறுத்தி இந்த உலக சாதனையை படைத்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேக்கப் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து 100 பேருக்கு மேக்கப் போட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடந்த ஏப்ரல் 30 ம் தேதி உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் உணவும் அழகே என்பதை வலியுறுத்தும் வகையில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நம்மை நாம் அழகு படுத்திக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த திருமதி. சுசிலா என்பவர் தலைமையிலான மேக்கப் கலைஞர்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேக்கப் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

இவர்களின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் அமைப்பினர் உலக சாதனைக்கான சான்றிதழ்களை மேக்கப் கலைஞர்களுக்கு வழங்கினர்.இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுசிலா, 20 ஆண்டுகளாக மேக்கப் துறையில் பணியாற்றி வருவதாகவும், சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் மேக்கப் செய்து வருவதாக தெரிவித்தார்.

ALSO READ | "ஆஸ்துமா குணப்படுத்தக்கூடிய நோய் தான்" விருதுநகர் மருத்துவர் விளக்கம்!

பார்லர் சென்றால் செலவாகும் என்று மனநிலையில் உள்ள நடுத்தர குடும்ப பெண்களுக்கு பார்லர் செல்லாமலே வீட்டிலே இருக்கும் பொருட்களை வைத்து நம்மை நாம் அழகு படுத்திக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உணவும் அழகே என்ற பெயரில் வீட்டில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனை பொருட்களை வைத்து ஒரே நேரத்தில் 100 பேருக்கு ஃபேசியல் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Beauty parlour, Local News, Virudhunagar, World record