முகப்பு /விருதுநகர் /

‘ பசிக்குதா வாங்க சாப்பிடுங்க ’ - தன்னார்வ அமைப்பின் இலவச உணவு சேவை

‘ பசிக்குதா வாங்க சாப்பிடுங்க ’ - தன்னார்வ அமைப்பின் இலவச உணவு சேவை

X
நோயாளிகளுக்கு

நோயாளிகளுக்கு அன்னதானம்! அகத்தியர் சங்கத்தின் சத்தமில்லாத சமூக சேவை 

Virudhunagar food donate | விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பசி தீர்க்க தினசரி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி சேவை செய்து வருகிறது அகத்தியர் சன்மார்க்க சங்கம்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாலை 5 மணிக்கு தினசரி ஒரு கார் வருகிறது. காரில் இருந்து அரக்க பறக்க இறங்கும் நபர்கள் சட்டென்று நான்கைந்து பாத்திரங்களை காரில் இருந்து இறக்கி வைக்கின்றனர். இதை கண்டவுடன் அங்கு ஒரு பெரிய வரிசை வந்து நிற்கிறது. அத்துனைபேரும் நோயாளிகள். பின்பு பாத்திரங்கள் திறக்கப்பட்டுஅதிலிருந்த அன்னம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரித்த  போது திருச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் விருதுநகரில் கடந்த நான்குஆண்டுகளாகத் தினசரி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார் மோகன்.

பசிபிணியை போக்குவதற்கு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தினசரி தாங்களே உணவினை தயார் செய்து வந்து அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் வெளிப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் சிலருக்கு என தினசரி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிவருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க | விருதுநகர் பாலத்தை சூழ்ந்த புகைமண்டலம்.. மூச்சு திணறலால் வாகன ஓட்டிகள் அவதி.. 

மேலும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகபணி செய்து வரும் இந்த சங்கம் விருதுநகரில் முதல் முறையாகதொடங்கிய போது கஞ்சி வழங்கி வந்ததாகவும், கொரோனாவுக்கு பின்னரே அன்னதானம் வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டு தற்போது தினசரி தோராயமாக 15,000 செலவு செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த செலவை நன்கொடையாளர்கள் உதவியோடு செய்துவருவதாக தெரிவித்தவர், நிறையபேர் தங்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்கு அன்னதானம் வழங்க பணம் கொடுத்து உதவி வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஏழைகளுக்கு உணவளிக்க விரும்புவோர் 98421 01357 என்ற எண்ணைதொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Food, Local News, Virudhunagar