முகப்பு /விருதுநகர் /

விழிப்புணர்வு வாகனமான பழைய ஜீப்.. விருதுநகரில் அட்டகாசமான முயற்சி!

விழிப்புணர்வு வாகனமான பழைய ஜீப்.. விருதுநகரில் அட்டகாசமான முயற்சி!

X
மஞ்சப்பை

மஞ்சப்பை விழிப்புணர்வு வாகனம்

Virudhunagar manjapai awareness | நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Virudhunagar, India

ஓடாத பழைய வாகனங்களை வைத்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தும் முயற்சியில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் எதிர்புறம் ஒரு ஜீப் நீண்ட நாட்களாக பழுதாகி நின்று கொண்டிருந்தது. பொது மக்களின் நடைபாதையில் நீண்டநாட்களாககேட்பாரற்று கிடந்த அந்த வாகனத்தை இதுவரை யாரும்கண்டுக்கொள்ளாமல்இருந்த நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் ஒருபுதுமுயற்சியைகையில் எடுத்து அந்தவாகனத்திற்குப்புத்துயிர் கொடுத்துள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல பழுதாகி நின்று கொண்டிருந்த வாகனத்தின் மூன்று பக்கங்களிலும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கான விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட ஃப்ளெக்ஸ்களை மாட்டி வைத்து அந்த வாகனத்தை பயனுள்ளதாக மாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க | பால் உற்பத்தியில் மாதம் ரூ. 70,000 லாபம்.. மாடு வளர்ப்பில் அசத்தி வரும் விருதுநகர் பட்டதாரி!

மேலும் இது பொதுமக்கள் செல்லும் நடைபாதையின் அருகே இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த பாதை வழியாக செல்லும் போது இதை பார்க்க நேரிடும். அதன் மூலம் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை மக்கள் மனதில் விதைக்க முடியும் என்ற கணக்கில் இதை மாவட்ட நிர்வாகம்  செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar