விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தென் கைலாயம் என்று அழைக்கப்படும் சதுரகிரி மலையில் இன்று (திங்கள் கிழமை) பிரதோஷ வழிபாடு மற்றும் புதன் கிழமை பெளர்ணமி வழிபாட்டை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சதுரகிரி மலைக்கு பிரதோஷ வழிபாடு மற்றும் பெளர்ணமி வழிபாட்டை முன்னிட்டு டிசம்பர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் பக்தர்கள் மலைகளில் உள்ள ஆறு, ஓடைகளில் குளிக்க கூடாது. எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விருதுநகர் மக்களே.. செங்கோட்டை செல்லும் இந்த ரயில்கள் ரத்து...
மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் கோயிலில் தங்க அனுமதி இல்லை என்றும், மேற்கூறிய நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar