வாழ்வில் எந்த ஒரு நிலைக்கு சென்றாலும் நமது பள்ளி கால நினைவுகள் மட்டும் நமக்கு எப்போதும் பசுமரத்தாணி போல நம் நெஞ்சில் புதைந்திருக்கும். ஒவ்வொரு முறையும் நாம் படித்த பள்ளியை கடந்து செல்லும் போது ஒரு முறையாவது நம் நண்பர்களை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கியிருப்போம். அந்த ஏக்கத்தின் விளைவாக நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துள்ளனர் விருதுநகர் கேவிஎஸ் பள்ளியில் 1978ல் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட நண்பர்கள், மெய் மறந்து மீண்டும் பள்ளி பருவத்திற்கே சென்று ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
உள்ளூர், வெளியூர், வெளிநாடு என பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் இந்த முன்னாள் மாணவர்கள், பழைய மாணவர்கள் சந்திப்பு என்றவுடன் ஓடி வந்து தங்களுக்கு வயதாகி விட்டது என்பதையே மறந்து அந்த நாள் நியாபகம் வந்ததே என்று ஆடி பாட ஆரம்பித்துவிட்டனர்.
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
உணவு இடைவெளிக்குப் பின்னர் தங்கள் படித்த பள்ளியை சென்று பார்த்த நண்பர்கள், தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று தங்களின் பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தனர்.
இதுகுறித்து பேசிய அவர்கள், ‘பள்ளி பருவ நினைவுகள் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாத ஒன்று.
1978 ல் பத்தாம் வகுப்பு படித்த நாங்கள் மீண்டும் ஒரு நாள் இப்படி பள்ளிக்கு நண்பர்களோடு வந்து வகுப்பறையில் அமர்வோம் என்று நினைத்து பார்க்கவில்லை, இதை எங்கள் வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என்று தெரிவித்தனர்.
விழா நிகழ்வின் இறுதியாக தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை வரவழைத்து, அவர்களை கவுரவித்த இந்த முன்னாள் மாணவர்கள். அதோடு நில்லாமல்இன்று தாங்கள் இந்த அளவிற்கு உயர்ந்து வந்திருப்பதற்கு,தங்கள் ஆசிரியரின் கண்டிப்பு தான் காரணம் என்பதை உணர்ந்து, இன்றைய இளம் தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை நல்வழி படுத்த அவர்களை கண்டிக்கும் உரிமையை தமிழக அரசு மீண்டும் ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் ஓர் தீர்மானமும் நிறைவேற்றினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.