முகப்பு /செய்தி /விருதுநகர் / பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த மலைப் பாம்பு... அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த மலைப் பாம்பு... அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த மலைபாம்பு

பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த மலைபாம்பு

Virudhunagar snake | தொடர்ந்து ஒரே வாரத்தில் 2 மலைபாம்பு வந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு  பெட்ரோல் பங்கிற்குள் ஒரே வாரத்தில் 2 வது முறையாக மலைப்பாம்பு புகுந்ததால் பங்க் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் கோபாலபுரம் விளக்கு பகுதியில் பாலாஜி என்பவர் தனியார் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பெட்ரோல் பங்கிற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பங்க் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே பெட்ரோல் பங்கில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிபட்டு மலைப்பகுதியில் விடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு மலைப்பாம்பு வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து  பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இந்த பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: M.செந்தில்குமார்,  சிவகாசி.

First published:

Tags: Local News, Snake, Virudhunagar