ஹோம் /விருதுநகர் /

கள்ளக்காதலை கண்டித்ததால் (கள்ளக்) காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை..

கள்ளக்காதலை கண்டித்ததால் (கள்ளக்) காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை..

கள்ளக்காதலை கண்டித்ததால் (கள்ளக்) காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை..

கள்ளக்காதலை கண்டித்ததால் (கள்ளக்) காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை..

Illegal Relationship | காதல் ஜோடி இருவரும் அடிக்கடி கிராமத்தை விட்டு தலைமறைவாக போவதும், பின்னர், உறவினர்கள் மீட்டு வந்து இரு குடும்பத்தினருக்கும் சமரசம் செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  சிவகாசி அருகே உள்ள எம்.பாரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ( வயது 42 ) இவரது மனைவி ராமலட்சுமி (வயது 35) இவர்களுக்கு 9ம் வகுப்பு பயிலும் கருத்தப்பாண்டி என்ற மகனும், 6ம் வகுப்பு படிக்கும் பொன்மணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வசிக்கும் கிராமத்தின் அருகிலுள்ள மேலப் பழையாபுரம் கிராமத்தில் உறவினர் பன்னீர்செல்வம் (வயது 40) தனது மனைவி மகேஸ்வரி (வயசு 32 ) என்பவருடன் வசித்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

  இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்துவரும் நிலையில், பன்னீர் செல்வத்திற்கும், ராமலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காதல் ஜோடி இருவரும் அடிக்கடி கிராமத்தை விட்டு தலைமறைவாக போவதும், பின்னர்,உறவினர்கள் மீட்டு வந்து இரு குடும்பத்தினருக்கும் சமரசம் செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

  இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் ராமலட்சுமியும், பன்னீர்செல்வமும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பக்கத்துகிராமமான திருவேங்கடபுரத்திலிருந்து சிவனாண்டிபட்டி செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில் சந்தித்து பூச்சிக்கொல்லி மருந்தை இருவரும் குடித்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

  இச்சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் தந்த தகவலின் பேரில் அங்கு சென்ற மாரனேரி போலீசார், இருவரின் பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் தந்த புகாரின் பேரில் போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்:அ. மணிகண்டன் விருதுநகர்

  Published by:Arun
  First published:

  Tags: Illegal affair, Illegal relationship, Toxic Relationship, Virudhunagar