ஹோம் /விருதுநகர் /

மீண்டும் இளைய தளபதியாக விஜய் மாறிட்டாரு - வாரிசு படம் பார்த்த விருதுநகர் ரசிகர்கள் நெகிழ்ச்சி

மீண்டும் இளைய தளபதியாக விஜய் மாறிட்டாரு - வாரிசு படம் பார்த்த விருதுநகர் ரசிகர்கள் நெகிழ்ச்சி

X
நிச்சயம்

நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி தான் வாரிசு 

Varisu Movie Review | நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க விஜய்யுடன் இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு, ஷியாம், ராஷ்மிகா மந்தனா என ஒரு பட்டாளமே நடித்துள்ள இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதியன்று வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வின்டேஜ் விஜய் :

முன்னதாக ட்ரைலர் வெளியான போது குடும்ப படம் என்ற உடன் இது சீரியல் போல அமைந்து விடும் என விமர்சிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி அத்தனையும் பொய் என நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். துப்பாக்கி, கத்தி, சர்கார் என வரிசையாக விஜய்யின் ஆக்சன் படங்களையே பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த படத்தின் மூலம் சச்சின் படத்தில் நடித்த அதே வின்டேஜ் விஜய்யை பார்க்க முடிந்ததாக கூறினர். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் தளபதி மீண்டும் இளையதளபதி ஆகிவிட்டார் என்கின்றனர்.

தில் ராஜூ சொன்னது போல படத்தில் சென்டிமென்ட், சண்டை, காதல் , காமெடி அனைத்துமே உள்ளதாகவும் மொத்தத்தில் இந்த வாரிசு குடும்பங்கள் கொண்டாட வேண்டிய வாரிசு என்கின்றனர்.

ஜில்லா வீரத்திற்கு பின்னர் இந்த பொங்கலுக்கு வாரிசா துணிவா என மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள் இரண்டுமே முதல் நாளில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், இனிவரும் பொங்கல் விடுமுறை நாட்களில் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Tamil News, Thunivu, Varisu, Virudhunagar