ஹோம் /விருதுநகர் /

விஜயை முதல்வராக்கிய ரசிகர்கள்.. விருதுநகரில் பரபரக்கும் வாரிசு பேனர்கள்..

விஜயை முதல்வராக்கிய ரசிகர்கள்.. விருதுநகரில் பரபரக்கும் வாரிசு பேனர்கள்..

X
விருதுநகர்

விருதுநகர்

Varisu Vijay Banner : விஜய்யை அரசியலுடன் தொடர்புபடுத்தி விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற ஒரு பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் அவரது படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அவரின் படங்களுக்கு அரசியல் தொடர்பான பிரச்சனைகளும் வந்தன. சமீபத்திய சில ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் பெயர் அரசியல் பேச்சுக்கள் எதிலும் அடிபடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது விஜய்யைஅரசியலோடு தொடர்புபடுத்தி பேனர்கள் வைத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

முன்னதாக வாரிசு பட வெளியீட்டுக்கு முன்புவிஜய்யை மறைந்த முதல் எம்ஜியார் போல சித்தரித்து ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் அதிகம் பேசப்பட்ட நிலையில், தற்போது விருதுநகரிலும்விஜய்யை அரசியலோடு தொடர்புபடுத்தி பேனர்கள் வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். வாரிசு பட வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் government of tamilnadu என்ற தலைப்புடன் தமிழக அரசு முத்திரையும் அதற்கு கீழே நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் முதலமைச்சர் என்ற பெயர் பலகையும் இடம் பெற்றிருந்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் சில பேனர்களில் தமிழ்நாடு தலைமை செயலக படமும் அரசியல் தொடர்பான வசனங்களும் இடம் பெற்றிருந்த நிலையில், விஜய்யின்ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவதை தான் விரும்பும்கின்றனரோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

First published:

Tags: Actor Vijay, Local News, Varisu, Virudhunagar