விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு இங்கு அழைத்துச் செல்வது பயனுள்ள வகையில் இருக்கும்..
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தின் வழியாக பாய்ந்தோடும் வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் முதுமக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக விளங்கும் தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை முறையாக அகழாய்வு செய்தால் பழந்தமிழர் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் வெம்பக்கோட்டை உட்பட 7 இடங்களில் அகழாய்வு நடத்த தமிழக அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து முதல் கட்டமாக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை தமிழக தொல்லியல் துறையினரால் வெம்பக்கோட்டையில் அகழாய்வு செய்யப்பட்டது. இந்த அகழாய்வில் மொத்தம் 16 குழிகள் தோண்டப்பட்டு 3,254 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட அதே பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட சிவகங்கை மாவட்டத்தின் கீழடிக்கு நிகராக இந்த அகழாய்விலும் சுடுமண் பொம்மைகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், கண்ணாடி வளையல்கள், தங்க ஆபரணங்கள், சங்கு வளையல்கள் மண்பாண்டங்கள் போன்ற அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவை இந்த அரங்கத்தில் நம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இந்த கந்தக பூமியில் பல ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த தடயங்களை பார்வையிட ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் இதற்கான அனுமதி இலவசம் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடை விடுமுறையில் தொலைதூர இடங்களுக்கு அழைத்து செல்வத விட இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம் தமிழரின் வரலாறு பற்றியும் வருங்கால தலைமுறையினருக்கு தெரிய வைப்பதுடன், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
குறிப்பா கீழடி வரை சென்று அங்குள்ள அரிய பொருட்கள பார்க்க முடியாதவங்க விருதுநகர் பக்கத்துல இருக்க வெம்பக்கோட்டைக்கு ஒரு நாள் போய் வரலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Excavation, Local News, Virudhunagar