ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் புத்தக திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி தொல்பொருட்கள்

விருதுநகர் புத்தக திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி தொல்பொருட்கள்

X
காட்சிக்கு

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி தொல்பொருட்கள்

Virudhunagar District News : விருதுநகரில் முதன் முதலாக நடைபெற்று வரும் புத்தக திருவிழா மைதானத்தில் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதனை பொதுமக்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குள பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில், அப்பகுதியை ஆய்வு செய்ய முடிவு செய்து, கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை அப்பகுதியானது தமிழக தொல்லியல் துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டது.

இதில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், புகைப்பான்கள், தங்க ஆபரணங்கள், பாசி மணிகள் போன்ற தொல் பொருள்கள் கிடைத்துள்ள நிலையில், அவையனைத்தும் தற்போது புத்தக திருவிழா நடைபெற்று வரும் கேவிஎஸ் பள்ளி மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

காலை 11 மணி க்கு துவங்கும் இந்த கண்காட்சியானது இரவு 9 மணி வரை நடைபெறும் நிலையில், இங்கு வருவோர் இதுவரை அகழ்வாராய்ச்சி என்றாலே கீழடி தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது நமக்கு அருகில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியிலே முன்னோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இது நம் மாவட்டத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் என்றும் தெரிவித்தனர்.

தற்போது பகல் நேரத்தில் பள்ளி மாணவர்களும், மாலை நேரத்தில் பொதுமக்களும் அதிகளவில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இக்கண்காட்சி வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar