ஹோம் /விருதுநகர் /

வாரிசா ? துணிவா ? விருதுநகர் மக்களின் கருத்து என்ன?

வாரிசா ? துணிவா ? விருதுநகர் மக்களின் கருத்து என்ன?

X
விஜய்,

விஜய், அஜித்

பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக திரைக்கு வர உள்ளதால் இந்தாண்டு பொங்கல் பண்டிகை இப்போதே களை கட்டிவிட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக திரைக்கு வர உள்ளதால் இந்தாண்டு பொங்கல் பண்டிகை இப்போதே களை கட்டிவிட்டது.

தமிழ் சினிமாவின் இருப்பெரும் துருவங்களாக இருந்து வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது இருவரது படங்களும் ஒரே நாளில் திரைக்கு வர இருப்பதால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் அஜித்க்கு நிகர் விஜய் தான் விஜய்க்கு நிகர் அஜித் தான் என்று பழகிய ரசிகர்கள் தற்போது இருவரும் பொங்கல் ரேசில் களம் இறங்கியுள்ளதால் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இரு படங்களின் ட்ரைலர்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இரு படங்களும் 11 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த பொங்கலுக்கு எந்த படம் வெற்றி பெறும் என விருதுநகரில் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பாலான ரசிகர்கள் இரு படங்களையும் பார்க்க உள்ளதாகவும், நல்ல கதையம்சம் உள்ள படம் வெற்றி பெறும். இரு படங்களுமே வெற்றி பெற்றால் கூட அது சந்தோஷம் தான் என்றனர்.

இன்னும் சிலர் பொங்கல் நம் பாரம்பரிய திருவிழா இதில் இருவரின் படங்களின் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் மகிழ்ச்சி இரட்டிப்பாக உள்ளது. அதனால் இரண்டு படங்களையும் பார்த்து பொங்கலை கொண்டாட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்: அழகேஷ்வரன், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar