ஹோம் /விருதுநகர் /

சிறுவர்களே வராத காரநேசன் மாநகராட்சி பூங்காவின் அவலம்.. கவனிக்குமா சிவகாசி மாநகராட்சி?

சிறுவர்களே வராத காரநேசன் மாநகராட்சி பூங்காவின் அவலம்.. கவனிக்குமா சிவகாசி மாநகராட்சி?

சிவகாசி

சிவகாசி காரநேசன் மாநகராட்சி பூங்கா

Sivakasi Corporation Park | சிவகாசி காரநேசன் மாநகராட்சி பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதை விரைந்து சரி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காரநேசன் மாநகராட்சி பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதை விரைந்து சரி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி காரநேசன் காலனியில் உள்ள ஞானகிரி சாலையில் கடந்த 2010ம் ஆண்டு சிறுவர்கள் விளையாடுவதற்கென சிறுவர் பூங்கா சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை அன்றைய செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

இதையடுத்து, சிறுவர்கள் விளையாடுவதற்கென ஊஞ்சல், சறுக்கல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை கொண்டு அமைக்கப்பட்ட இந்த பூங்காவானது தற்போது 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

இதையும் படிங்க : விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க...

இத்தனை ஆண்டுகளில் இந்த பூங்காவானது புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் இதிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்து தற்போது இந்த பூங்காவானது பயனற்று காணப்படுகிறது.

ஏற்கனவே தொழில் நகரமான சிவகாசியில் மக்களிடையே இங்கு நல்ல பொழுதுபோக்கு அம்சம் இல்லை என்பது பெரிய மனக்குறையாக உள்ளது. சிவகாசி மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்னர் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னேற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், சேதமடைந்துள்ள இந்த பூங்காவையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு விரைந்து இதை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar