முகப்பு /விருதுநகர் /

சேதமான சாலையில் மணலை நிரப்பிய ஊழியர்கள்.. விருதுநகர் மக்கள் அதிர்ச்சி..

சேதமான சாலையில் மணலை நிரப்பிய ஊழியர்கள்.. விருதுநகர் மக்கள் அதிர்ச்சி..

X
சேதமான

சேதமான சாலையில் மணலை நிரப்பிய ஊழியர்கள்

Virudhunagar District News | விருதுநகர் அருகே மோசமாக உள்ள ரயில்வே கேட் சாலை முழுவதையும் சீரமைக்காமல் பள்ளங்களில் மணல் கொண்டு நிரப்பப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், சிவகாசி விருதுநகர் ரயில் பாதை இருப்பதால் இங்கு ஒரு ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் நீண்ட காலமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில், புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், வழக்கம்போல் சாலையில் உள்ள பள்ளங்கள் மணல் கொண்டு மட்டும் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுபற்றி பேசிய வாகன ஓட்டிகள் இந்த சாலை நீண்ட காலமாக இப்படி தான் இருப்பதாகவும், அவ்வப்போது பள்ளங்கள் மணல் கொண்டு நிரப்ப படுவதும், பின்பு மீண்டும் சாலையானது பழைய நிலைக்கு திரும்பி விடுவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. சாலையில் உள்ள பள்ளங்களை மணல் கொண்டு மூடுவது என்பது தற்காலிக தீர்வு தான் என்று தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், விருதுநகர், சிவகாசி ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த ரயில்வே கேட் அருகில் உள்ள நெடுஞ்சாலை பாலம் உயரம் குறைவாக உள்ள காரணத்தால் தற்போது அந்த பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் பதிக்கும் பணிக்காக பாலம் இடிக்கப்படலாம் என்று பேசப்படும் நிலையில், ஒரு வேளை பாலம் இடிக்கப்பட்டால் அவ்வழியாக சென்ற வாகனங்களும் இந்த கேட் வழியாக தான் செல்ல வேண்டும். எனவே, நிலைமை புரிந்து கொண்டுவிரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Virudhunagar