ஹோம் /விருதுநகர் /

தொழிற் பயிற்சி; கடன் வாங்க உதவி- விருதுநகரில் சுயதொழிலுக்கான இலவச பயிற்சி குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

தொழிற் பயிற்சி; கடன் வாங்க உதவி- விருதுநகரில் சுயதொழிலுக்கான இலவச பயிற்சி குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

சுயதொழில்

சுயதொழில் பயிற்சி

Virudhunagar | விருதுநகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து கிராமப் புற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

இந்தியாவில் நாளுக்கு நாள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. வேலையை தேடாமல் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்குவதே இதற்கான சிறந்த தீர்வு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சுயதொழில்:

உண்மையில் சுயதொழில் தொடங்குவது என்பது நல்ல விஷயம். இன்று நாட்டில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாள் சிறுதொழிலாக தொடங்கப்பட்டவை தான் இதன் மூலம் வேலை வாய்ப்பை நிச்சயமாக அதிகரிக்க முடியும்.

சுயதொழில் பயிற்சியில் பெண்கள்

ஆனால் என்ன தொழில் செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது போன்ற தொழில் தொடங்குவதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இதனாலேயே பெரும்பாலோர் கிடைத்த வேலைக்கு சென்று விடுகின்றனர்.

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி:

இதற்காக மத்திய அரசு ministry of rural development department மூலமாக ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை கிராமப்புற இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறது.

சுயதொழில் பயிற்சியில் பெண்கள்

விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலையம் எதிரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்களிப்புடன் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இதற்கு இயக்குநராக இருக்கும் தங்க லக்ஷ்மி இந்தத் திட்டம் குறித்து விளக்கினார். அவர், ’கிராமப்புற இளைஞர்களின் மேம்பாட்டுக்காக இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அழகு கலை, தையல் பயிற்சி, மொபைல் போன் சர்வீஸ் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட பயிற்சிகளை வழங்கி வருவதாகவும், அடுத்த மாதம் முதல் ஊதுபத்தி தயாரித்தல், ஆடுவளரப்பு, காகித பை தயாரிப்பு பற்றிய பயிற்சி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பம்சங்கள்:

பயிற்சிக்கு கட்டனம் ஏதும் இன்றி இலவசமாகவே வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது மதிய உணவு, தேநீர் போன்றவையும் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும் சுயதொழில் தொடங்க வங்கி கடன் பெற வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோர் குறைந்த பட்சம் 8ம் வகுப்பு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 97893 82032 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar