முகப்பு /விருதுநகர் /

கண்ணை நம்பாதே ரிவ்யூ.. 'உதய் அண்ணா நடிப்பு அருமை... செம ட்விஸ்ட்' - விருதுநகர் ரசிகர்களின் கருத்து 

கண்ணை நம்பாதே ரிவ்யூ.. 'உதய் அண்ணா நடிப்பு அருமை... செம ட்விஸ்ட்' - விருதுநகர் ரசிகர்களின் கருத்து 

X
உதயநிதி

உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கண்ணை நம்பாதே

Kannai Nambathey FDFS Review | உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படம் பார்த்த விருதுநகர் ரசிகர்கள் உதயநிதியின் நடிப்பு குறித்தும் படத்தை பற்றியும் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று (மார்ச் 17) வெளியாகியிருக்கும் ‘கண்ணை நம்பாதே’ படம் பார்த்த விருதுநகர் மாவட்ட ரசிகர்கள் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பு அருமையாக இருப்பதாக கூறி, பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் - சினிமா என பயணித்து வரும் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவான  ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் இன்று (மார்ச் 17) தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. உதயநிதி நடித்த இப்படத்தை லிபி சினி க்ராப்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்க இப்படத்தில் ஆத்மிகா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் திரில்லர்:

மொத்தமாக 2 மணிநேரம் 13 நிமிடங்களை கொண்ட இப்படம் க்ரைம் திரில்லர் படமாக வந்துள்ளது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் பாஸிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகரை பொறுத்த வரை முதல் நாள் காட்சி பார்த்த ரசிகர்கள், உதயநிதி நடித்துள்ள வழக்கமான படங்களை போல் இல்லாமல் இந்த படத்தில் நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளதாகவும், நாளுக்கு நாள் அவரின் நடிப்பில் முன்னேற்றம் இருப்பதாகவும், மொத்தத்தில் கண்ணை நம்பாதே அனைவரும் குடும்பத்தோடுவந்து பார்க்க வேண்டிய படம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tamil Cinema, Udhayanidhi Stalin, Virudhunagar