ஹோம் /விருதுநகர் /

நெல் ஜெயராமன் நினைவு நாள்.. விருதுநகரில் நடப்பட்ட மரக்கன்றுகள்! ஈஷா மையம் ஏற்பாடு

நெல் ஜெயராமன் நினைவு நாள்.. விருதுநகரில் நடப்பட்ட மரக்கன்றுகள்! ஈஷா மையம் ஏற்பாடு

நெல் ஜெயராமன் நினைவு நாளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நெல் ஜெயராமன் நினைவு நாளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷாவின் மரம் சார்ந்த விவசாய குழு பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில், நெல் ஜெயராமன் நினைவு நாளை முன்னிட்டு நேற்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயம் செய்வதன் மூலம் மழை தருவிக்க மரங்கள், மண்வள மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல், ஆற்று வடிநிலப் பகுதிகளில் தொடர்ந்து மரங்கள் நடுவதன் மூலம் நதிகளின் நீர் பிடிப்பு அதிகரித்து நதிகள் மீட்டுறுவாக்கம் பெறும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

மரம் சார்ந்த விவசாயம் செய்யும் போது விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கிறது. இதனால் மரம் சார்ந்த விவசாயம் குறித்த வழிகாட்டுதல்களை ஈஷா நர்சரி வழங்கி வருகிறது. தற்போது மானாவாரி நிலங்களிலும் மர விவசாயம் செய்வதற்கான தொழில் நுட்பங்களை ஈஷா மரம் சார்ந்த விவசாயம் வழங்கி வருகிறது.

மரவிவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷாவின் மரம் சார்ந்த விவசாயக் குழுவினர் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சிகளில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம். மேலும் குறைந்த விலையில் மரக்கன்றுகளை பெறவும், அவரவர் நிலத்திற்கு ஏற்ற, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து நடுவதற்கான ஆலோசனையைப் பெறவும் காவேரி கூக்குரல் உதவி எண்ணான 80009 80009 ஐ தொடர்பு கொள்ளலாம்.

இந்த வகையில் நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமசந்திராபுரம் கிராமம், வத்திராயிருப்பு தாலுகா, விருதுநகர் மாவட்டத்திலுள்ள திரு.சத்திய மூர்த்தி அவர்களின் தோட்டத்தில் சுமார் 3000 டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

மேலும், சின்ன கொல்லப்பட்டி கிராமம், சாத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டத்தில் மணிராஜின் தோட்டத்தில் 2500 டிம்பர் மரக்கன்றுகள் சாத்தூர் தாலுக்கா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் நடவு செய்யப்பட்டது.

First published:

Tags: Isha, Local News, Tree plantation, Virudhunagar