முகப்பு /விருதுநகர் /

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படுமா ? விருதுநகர் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு..

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படுமா ? விருதுநகர் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு..

X
விருதுநகர்

விருதுநகர் வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி இயக்கப்படுமா ?

Silambu Express Train | விருதுநகர் வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னை வரும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2013 ம் ஆண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்குடி வரை விரைவு ரயிலாக இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ், பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை வழியாக மானாமதுரை வரை நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2017ம் ஆண்டில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும், முதலில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தினசரி ரயில் இயக்கப்படுமா?

அதன்படி சென்னையில் இருந்து செங்கோட்டை வரை புதன், வெள்ளி, சனி என மூன்று நாளிலும் மறுமுனையில் செங்கோட்டையில் இருந்து சென்னை வரை வியாழன்,சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்...  விருதுநகரில் காட்டுக்குள் இருக்கும் பசுமை நிறைந்த சரணாலயம்..

மொத்தமாக 683 கி.மீ மற்றும் 12 மணிநேரம் பயணநேரம் கொண்ட இந்த இரயிலில் கூட்ட நேரத்தில் இடையில் இருக்கும் விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த இரயில் பயணிகள் இடமில்லாமல் நின்றபடி பயணிப்பதாக கூறப்படுகிறது. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விருதுநகரை பொருத்தவரை விருதுநகரில் இருந்து தலைநகரான சென்னைக்கு நேரடி இரயில் சேவை இல்லாத நிலையில், குறைந்தபட்சம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலாவது தினசரி இயக்கப்பட வேண்டும் என்பதே விருதுநகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar