முகப்பு /விருதுநகர் /

செயல்படாத போக்குவரத்து சிக்னல்களால் விருதுநகரில் போக்குவரத்து நெரிசல்!

செயல்படாத போக்குவரத்து சிக்னல்களால் விருதுநகரில் போக்குவரத்து நெரிசல்!

X
செயல்படாத

செயல்படாத போக்குவரத்து சிக்னல்களால்  போக்குவரத்து நெரிசல்!!!

Virudhunagar News | விருதுநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அல்லம்பட்டி முக்கு ரோடு, கருமாதிமடம் எம்ஜிஆர் சிலை , ஆத்துப்பாலம் மற்றும் மீனாம்பிகை பங்களா போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரின் நகர் பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் முறையாக செயல்படாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஓர் வளர்ந்து வரக்கூடிய நகரமாக இருக்க கூடிய விருதுநகரில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அல்லம்பட்டி முக்கு ரோடு, கருமாதிமடம் எம்ஜிஆர் சிலை , ஆத்துப்பாலம் மற்றும் மீனாம்பிகை பங்களா போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த சிக்னல்கள் முறையாக செயல்படாமல் இருப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இது பற்றி பேசிய மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளரும் சமூக ஆர்வலருமான காளிதாஸ், விருதுநகரில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக கருமாதிமடம் எம்ஜிஆர் சிலை பகுதி அருப்புக்கோட்டை செல்லும் சாலை மற்றும் சாத்தூர் செல்லும் சாலை இரண்டும் சந்திக்கும் பகுதி என்பதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என்றும் இது தவிர மற்ற பகுதிகளான முக்கு ரோடு, மீனாம்பிகை பங்களா மற்றும் ஆத்துப்பாலம் போன்ற பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Traffic, Virudhunagar