முகப்பு /விருதுநகர் /

விருதுநகரின் பெருமையை உலகுக்கு சுட்டி காட்டும் சுற்றுலாத் தலங்கள்

விருதுநகரின் பெருமையை உலகுக்கு சுட்டி காட்டும் சுற்றுலாத் தலங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம்

விருதுநகரில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் முதல் பல்வேறு இடங்கள் கண்டு ரசிப்பதற்கு உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தின் உள்ள சுற்றுலா தலங்கள் நம்மையும் ஒரு நிமிடம் உறைய வைக்கிறது. மேலும் இத்தனை ஆண்டுகளாக இந்த இடத்தின் மதிப்பைத் தெரியாமல் இருந்து இருக்கிறோமே என்றும் உணர வைக்கிறது. விருதுநகருக்கு போனால் இங்குள்ள சுற்றுலா தலங்களை மறக்காமல், ஒரு முறையாவது விசிட் அடித்துவிட்டு வாங்க.!

அய்யனார் அருவி:

அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் அழகின் உச்சம். இங்குள்ள அய்யனார் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இந்தப் பேரழகை ரசித்து வர விருதுநகரிலிருந்து 12 கி.மீ. பயணிக்க வேண்டும்.

அய்யனார் அருவி

இருக்கன்குடி

சாத்தூருக்கு கிழக்கில் அர்ஜீன நதியும், வைப்பாறும் சங்கமிக்கும் இருக்கன்குடியில் புகழ்மிக்க மாரியம்மன் கோயில் உள்ளது. ஆறுகளின் சங்கமத்திற்கு அருகிலேயே அம்மன் கோயில். இங்கு 21 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையானது. இருக்கன்குடிக்குப் போகாமல் இருக்காதீர்கள்.

குகன் பாறை

இந்தச் சிற்றூரின் மேற்கே உள்ள சிறிய மலைக்குன்றாகக் குகன்பாறை உள்ளதால், அப்பெயரிலேயே இந்தக் கிராமமும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த குகை சமணத் துறவிகளின் பள்ளியாகப் பயன்படுத்தப்பட்டது. இம்மடம் முந்நூற்றுவர் பெரும்பள்ளி என்ற பெயரில் நிறுவப்பட்டதாகவும் சீடர்கள் முந்நூற்றுவர் கோயில் பிள்ளைகள் என அழைக்கப்பட்டதாகவும் பத்தாம் நூற்றாண்டின் வட்டெழுத்து கல்வெட்டு கூறுகிறது. வேம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையில் குகன்பாறை அமைந்துள்ளது.

காமராசர் இல்லம்

கர்மவீரர் காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்து உச்சம் பெற்றவர். தனக்கென வாழாத தகைமையாளர். பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் படிப்புக்குப் பசி தடையாகிவிடக் கூடாது என்பதற்காக, முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்திய படிக்காத மேதை. அவரது கைக்கடிகாரம், ஆடைகள் மற்றும் பயன்படுத்திய சிலபொருள்களும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காமராஜர் நினைவு இல்லம்

குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம்

ஓர் அழகிய தலமாக வளர்ந்துவரும் நீர்த்தேக்கம். அர்ஜீனா நதியின் கிளை ஆறான கௌசிக மகா நதியின் குறுக்கே குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பயணிகளின் மகிழ்ச்சிக்காகப் படகுவசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பலவகையான நீர்ப்பறவைகள் வலசை வருகின்றன.

திருவில்லிப்புத்தூர்

தமிழக அரசின் இலச்சினையே திருவில்லிப்புத்தூர் கோபுரம் தான். காதலின் தனித்துவமான தூய வடிவம் கண்ணனின் காதலி ஆண்டாள் பிறந்த மண். பெரியாழ்வாரின் பெருமைமிகு மகள். நுண்மையான ஆணீன் மீது பெண் கொண்ட மோக உருவே ஆண்டாள் என்று நவீன பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆண்டாள் காதலில் உருகுகிறாள். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். திருப்பாவை பாடிய தெய்வீக பாவை. 12 அடுக்குகளை கொண்டு 192 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான ராஜகோபுரம் தழிழ்நாட்டின் அடையாளம்.

First published:

Tags: Local News, Virudhunagar