பலருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியிலேயே மாற்றிக்கொள்ள முடியும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை எதாவது ஒரு கிழிந்த நோட்டு நம் கைகளுக்கு வந்துவிட்டால்போதும் நம் தூக்கமே போய்விடும்.
அதை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என கிழிந்த ரூபாய் நோட்டை ஒட்டி மடித்து வைத்து கொடுத்து எங்காவது கொடுத்து மாற்ற முயற்சித்திருப்போம். இப்படி கிழிந்த ரூபாய் நோட்டுகளை சிரமம் இல்லாமல் நம் வங்கிகளிலேயே மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
நீண்ட காலமாக, இதற்கென ஆர்.பி.ஐ தனி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது என்றார் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதன்மை மேலாளர் சிதம்பரம். ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரை அதிலிருக்கும் கிழிந்த பகுதிகளை வைத்து தான் அதை மாற்ற முடியுமா இல்லையா என முடிவு செய்ய முடியும் என்று விவரித்தார்.
இதையும் படிங்க : விருதுநகர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு
எந்த மாதிரியான நோட்டுகளை மாற்றலாம்?
ரூபாய் நோட்டு இரண்டாக கிழிந்துள்ளது எனில் அது முழு மதிப்பு பெறும். அதாவது கொடுத்த கிழிந்த நோட்டிற்கு பதிலாக அதே மதிப்பில் புதிய நோட்டை பெறலாம்.
இதே ரூபாய் நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட கிழிசல்களாக காணப்பட்டால் அதிலிருக்கும் பெரிய பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஸ்கேன் செய்யப்படும் அந்த பெரிய பகுதியின் அளவு 80 சதவிகிதத்தை விட அதிகமாக இருந்தால் அதுவும் முழு மதிப்பு பெறும்.
இதை 80 முதல் 40 சதவிகிதம் வரை இருந்தால் அது பாதி மதிப்பு பெறும் (உதாரணமாக 500 ரூபாய் கொடுத்தால் 250 ரூபாய் திரும்ப கிடைக்கும்). அதே 40 சதவிகிதத்தை விட குறைவாக இருக்கும் போது அந்த ரூபாய் நோட்டுகளை நம்மால் மாற்றிக் கொள்ள இயலாது.
எங்கு மாற்றலாம்?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை அருகில் இருக்கும் வங்கிகளிலேயே மாற்றிக்கொள்ளலாம். வங்கியின் வேலை நாட்களை பொறுத்து பணம் மாற்றுதலில் நாட்கள் முன்பின் ஆகலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வங்கிகளில் அவ்வப்போது பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முகாம் நடக்கும். அந்த நாட்களில் அங்கு சென்றால் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar