ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க!

விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க!

மின்தடை

மின்தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நாளை (நவம்பர் 17) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் துணை மின் நிலைய பகுதிகளில், நாளை (வியாழக்கிழமை) மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படவுள்ளது. இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

அதன்படி, ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர் கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, கரிசல்குளம், தொம்பங்குளம், சிவலிங்காபுரம், நரிகுளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar