ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க...

மின்தடை

மின்தடை

Power Shutdown | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள, நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதனால், சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், பட்டியூர், காமாட்சிபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல், நக்கநேரி, இளந்திரை கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Power Shutdown, Virudhunagar