Home /virudhunagar /

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

    1.ஒட்டங்குளத்தில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் காளையர்கள்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஒட்டங்குளத்தில் அருள்மிகு அய்யனார் கருப்பசாமி திருக்கோயில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் 350 ஜல்லிக்கட்டு காளைகள் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஒட்டங்குளம் கிராமத்தில் அருள்மிகு அய்யனார் சுவாமி, கருப்பசாமி திருக்கோயில் வைகாசி மாத பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகிறது.
    கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு வெகு விமர்சியாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு செய்த நிலையில் 350 ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே வாடிவாசலில் களம் இறக்கப்பட்டன. அதேபோல் மாடுபிடி வீரர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 பேர் வீதம் 10 சுற்றுகள் மூலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில் ,குக்கர், வெள்ளி அண்டா மற்றும் குடம், ஏர்கூலர் மிஷின், செல்போன் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. அதேபோல் பிடிபடாத உள்ளூரை சேர்ந்த காளையான கட்டப்பா, வெளியூர் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    2.குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வில்லிபத்திரி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்பு துறையின் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    வில்லிபத்திரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் அப்பகுதியில் சுமார் 30 வருடங்களாக ஒரு சிறிய பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் மல்லாங்கிணறு சார்பு ஆய்வாளர் ஜோதிமுத்து தலைமையிலான குழு நடத்திய திடீர் சோதனையில் சுமார் 20 கிலோ எடையில் 50 ஆயிரம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    அதனையெடுத்து கடையின் உரிமையாளர் மாரியப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் அரசின் விதிகளின்படி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு இருப்பதால் அவ்வகையான பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைக்க அரசு உத்தரவிட்ட நிலையில் இன்று குட்கா பொருட்கள் விற்பனை செய்த அந்த கடையை அருப்புக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் காசிம் தலைமையிலான குழு சீல் வைத்தது.

    3. திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிப்பு

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் வர லாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் வரலாற்று துறை மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
    அதில் கி.பி. 9-10-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியர்களின் நடுகல்லினை கண்டறிந்தனர்.
    இதுகுறித்து வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் கூறும்போது, ’இந்த கல்வெட்டானது 6 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட கல்லின் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டாக காணப்படுகிறது. இக்கல்வெட்டின் வரிகளை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது.
    அதில் இக்கல் வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்தும், வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டானது 2 ஊர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் புல்லன்சாத்தன் என்னும் வீரர் ஒரு ஊரை வென்று உயிர் நீத்தார் என்பதை கூறுகிறது. இதுவரையில் பாண்டியநாட்டில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ள இலுப்பையூர் கல் வெட்டாகும்.
    மற்றொன்று இதே ஊருக்கு தெற்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் ராமநாதபுரம் மாவட்டம் நீராவிக்கு அருகிலுள்ள கரிசல்குளம் என்ற கிராமத்தில் உள்ள நடுகல் ஆகும். இது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. பசுக் கூட்டங்களை கவர்ந்து சென்றபோது எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் தான் இது.
    விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் ராஜபாளையம் அருகே முதுகுடியில் பிற்கால பாண்டியரின் நடுகல்லானது கண்டறியப்பட்டுள் ளது. தற்போது இம்மாவட்டத்தில் எங்களது களப்பணியின் வாயிலாக முற்கால பாண்டியரின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

    4.விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 27-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மேதநாதரெட்டி தெரிவித்துள்ளார். இக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ள அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகளும் அரசு அலுவலர்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    5.விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி

    விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். விருதுநகர் விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஜமாபந்தி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) முதல் 27-ம் தேதி வரை கலெக்டர் தலைமையிலும், வெம்பக்கோட்டை தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மே 25-ந் தேதி முதல் 27--ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 1 முதல் 2 வரையிலும் 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் சிவகாசி சப்-கலெக்டரால் மே 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் 3 நாட்கள் ஜமாபந்தி நடத்தப்படும். சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மூலம் மே 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 1-ந் தேதி மற்றும் ஜூன் 2-ந் தேதி ஆகிய 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெறும். விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) மே 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரையிலும் 6 நாட்கள் ஜமாபந்தி நடத்துவார். காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர்(கலால்) நாளை முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடத்துவார்.
    திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர், நாளை முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 7-ந் தேதி மற்றும் ஜூன் 8-ந் தேதி ஆக மொத்தம் 8 நாட்கள் ஜமாபந்தி நடத்துவார். அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. நாளை முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 7-ந் தேதியும் ஆக மொத்தம் 7 நாட்கள் நடத்துவார். ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் நாளை தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் மற்றும் ஜூன் 1-ந்தேதி மற்றும் 2-ந் தேதி களிலும் மொத்தம் 5 நாட்கள் ஜமாபந்தி நடத்துவார். ஜமாபந்தி தொடர்புடைய கிராம நில உடமையாளர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். சிவகாசி மேலும் சிவகாசி தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை தொடங்கி ஜூன் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தாசில்தார் லோகநாதன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு பெறுகிறார். முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேண்டுராயபுரம், எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி, ஆனையூர், கொங்கலாபுரம், சிவகாசி, விஸ்வநத்தம், நாரணாபுரம், வி.சொக்கலிங்காபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் மனுக்களை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    6.இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டிலும், விருதுநகர் சிறார் நீதிமன்ற குழுமத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    பாலியல் வன்கொடுமை வழக்கு விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், விருதுநகரை சேர்ந்த ஹரிகரன்(வயது 27), ஜுனத்அகமது(27), ரோசல்பட்டியைச் சேர்ந்த மாடசாமி(34) மற்றும் பிரவீன்(26) ஆகிய 4 பேர் மீதும், விருதுநகரைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இச்சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், 60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். Also Read - அரசு பெண்கள் கல்லூரியில் யோகா பயிற்சி விசாரணை இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை அதிகாரிகளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் துணை சூப்பிரண்டு வினோதினி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிகரன் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களும் விருதுநகர் சிறார் நீதிக்குழுமத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தன்னை தவறான பாதையில் வழி நடத்தினார் என்று நீதிபதிகளுக்கும், முதல்-அமைச்சருக்கும் மற்றும் சட்டப்பணிகள் குழுவிற்கும் மனு அனுப்பினான். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி முன்பு, 1 மணி 45 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம் அளித்தான். பின்னர் இவ்வழக்கில் இருந்து ஒரு சிறுவனை விடுவிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
    குற்றப்பத்திரிகை தாக்கல் இந்தநிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத்திடம், ஹரிகரன் உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை 806 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்புடைய 84 ஆவணங்களையும் கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட 4 சிறுவர்களில் 3 பேர் மீது விருதுநகர் சிறார் நீதிக்குழும நீதிபதியும், விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டுமான கவிதா முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 15 வயது சிறுவன் இந்த வழக்கிலிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விடுவிக்கப்பட்டுள்ளான்.

    7.வண்டிப்பாதை, நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை-கலெக்டரிடம் மனு

    சிவகாசி தாலுகா சுப்பிர மணியபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயன்படும் வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வலியுறுத்தியும், இரண்டு நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். விருதுநகர் விருதுநகர் சிவகாசி தாலுகா சுப்பிர மணியபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயன்படும் வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வலியுறுத்தியும், இரண்டு நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கழிவுநீர் வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து ெரயில்வே பீடர் ரோடு பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் தனிநபர் ஒருவர் கழிவுநீரை விடுவதால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் கழிவுநீரை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் ஊழியர் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுக்கு ஊதியத்திலிருந்து மாதம்தோறும் ரூ.180 பிடித்தம் செய்து வரும் நிலையில் அதற்கான அட்டை வழங்காமல் உள்ளதாலும் ஊதிய நிலுவைத் தொகை வழங்காமல் உள்ள நிலை உள்ளதாக மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் ஊதிய நிலுவைத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவி விருதுநகர்அருகே உள்ள நந்திரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சோலை என்பவர் தீ விபத்தில் தனது வீடும் ஆட்டுக்கொட்டகையும் சேதமாகி விட்ட நிலையில் தனக்கு உடனடியாக நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். ராஜபாளையம் பகுதி திருநங்கைகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்கக் கோரியும் இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி பலருக்கு கிடைக்காத நிலை உள்ளதால் அதை வழங்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி