Home /virudhunagar /

டிக்கெட் எடுக்கும் தகராறில் பேருந்து நடத்துனருக்கு மண்டை உடைப்பு... புதிய பாஜக நிர்வாகிகள் நியமனம்.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்கும் தகராறில் பேருந்து நடத்துனருக்கு மண்டை உடைப்பு... புதிய பாஜக நிர்வாகிகள் நியமனம்.. - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District: டிக்கெட் எடுக்கும் தகராறில் பேருந்து நடத்துனருக்கு மண்டை உடைப்பு முதல் புதிய பாஜக நிர்வாகிகள் நியமனம் வரை.. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை..

    கால், அரை, முக்கால் பழைய கணக்கு வாய்ப்பாட்டை சிறுமிகளிடம் ஒப்புவித்து அசத்திய தாத்தா -வீடியோ வைரல்

    விருதுநகர் மாவட்டம் குறுந்த மடத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் பள்ளி சிறுவர் சிறுமியருக்கு பழங்கால பழைய கணக்கு வாய்ப்பாட்டை ஒப்புவித்து அசத்தும் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் குருந்தமடம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் கம்பை ஊன்றி கொண்டு தள்ளாடி வயல்வெளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமிகளை அழைத்து பழைய கணக்கு வாய்ப்பாடு கால் அரை முக்கால் குறித்த கணக்கு வாய்ப்பாட்டை சரளமாக ஒப்பித்து அசத்தியுள்ளார். முதியவர் ஒப்பிக்கும் பழைய வாய்ப்பாட்டை அருகில் நின்ற சிறுவர் சிறுமியர்கள் பெரும் ஆச்சரியத்துடன் வியப்புடனும் கண்டு ரசித்தனர்.முதியவர் ஒப்புவிக்கும் வாய்ப்பாட்டை அருகில் இருந்த இளைஞர் ஒருவர் வீடியோவை சமூக இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
    மேலும் அந்த வீடியோவில் முதியவர் சரளமாக தொடக்கத்தில் வாய்ப்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் நிறைவு செய்யும் போதும் ஆங்கிலத்தில் பேசியுள்ளது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    தற்போது பழைய வாய்ப்பாட்டை ஒப்புவித்த முதியவர் கிராம மக்கள் மட்டுமின்றி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியுள்ளார்.

    தாய் மற்றும் 4 மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீசார் தீவிர விசாரணை சாத்தூர் அருகே தாய் மற்றும் 4 மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு. கொலையா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்த்தவர் கொத்தாளமுத்து(27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி (27) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து கொத்தளமுத்து, காயத்ரி இருவரும் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று தனது மருமகள் காலை முதல் அவரது அறையை விட்டு வெளியே வாராததால் அறைக்குள் சென்று பார்த்த போது மருமகள் காயத்ரி மற்றும் 4 மாத குழந்தையும் உயிரிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாய் மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆண நிலையில் தனது 4 மாத குழந்தையுடன் காயத்ரி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயத்ரி கணவர் கெத்தாளமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

    டிக்கெட் எடுக்க ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து நடத்துனர் மண்டை உடைப்பு-பெரும் பரபரப்பு

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிக்கெட் எடுக்க ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து நடத்துனர் மண்டை உடைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை பெரியதெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(54).அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்றிரவு மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வந்த பேருந்தில் நடத்துனராக ரமேஷ் வந்துகொண்டிருந்தார்.அப்போது மண்டேலா நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய பயணிகளில் ஒருவர் மட்டும் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார்.

    டிக்கெட் எடுக்காத ஆள் யார் என பலமுறை கேட்டும் யாரும் பதில் அளிக்காததால் அருப்புக்கோட்டை நகர் எல்லைக்குள் பேருந்து நுழைந்ததும் பயணிகளின் டிக்கெட்டை நடத்துநர் ரமேஷ் வாங்கி பரிசோதித்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இளைஞரை சத்தம் போட்ட நடத்துனர் ரமேஷ் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அந்த இளைஞர் டிக்கெட் எடுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது நண்பர்களை போன் செய்து தான் இறங்கும் அருப்புக்கோட்டை சிவன் கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு வரவழைத்துள்ளார். சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் வந்ததும் அங்கு தயாராக இருந்த அந்த இளைஞரின் நண்பர்கள் பேருந்தில் ஏறி கல்லால் நடத்துனர் ரமேஷை தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த தாக்குதலில் நடத்துனர் ரமேஷ் மண்டை உடைந்து படுகாயமடைந்தார். காயமடைந்த ரமேஷ் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞர்கள் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டிக்கெட் எடுக்க கூறியதால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அரசு பேருந்து நடத்துனர்களிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சரக்கு வாகனத்தில் ஆட்டுக்குட்டிகள் திருடிய நபர் கைது-போலீசார் தீவிர விசாரணை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகனத்தில் ஆட்டுக்குட்டிகள் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகின்றன.

    அருப்புக்கோட்டை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ்(36).ஆடுகள் வளர்த்து தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் தனது வீட்டின் வெளியே ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு தன்ராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது சரக்கு வாகனத்தில் சிலர் தன்ராஜ் வளர்க்கும் ஆடுகளை திருடி ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.இதைப்பார்த்து தன்ராஜ் சத்தம் போட்டதும் ஆடுதிருடர்கள் தப்பி ஓட முயன்றனர்.அதற்குள் அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து ஆடு திருடும் கும்பலில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.மேலும் உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் ஆடு திருடியவரையும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தராஜேந்திரன் என்பவர் மகன் பூமி(38)என்பதும் காய்கறி விற்பனை செய்வது போல் வந்து ஆடுகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது.இதனையடுத்து பூமி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் வேறு எங்காவது ஆடுகள் திருடினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மரம் முறிந்து 8 வீடுகள் சேதம்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பெரிய ஆலமரம் சாய்ந்து விழுந்ததில் எட்டு வீடுகள் வாகனங்கள் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் உயிர் சேதம் இன்றி தவிர்க்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகள் வாகனங்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகேயுள்ள நாலூர் விலக்கு சந்திப்பில் கம்பீரமாக நின்ற ஆலமரமொன்று இன்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் திடீரென முறிந்து சரிந்து விழுந்தது.இதில் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு சொந்தமான ஆட்டோ மற்றும் அருகிலுள்ள சுமார் 8க்கும் மேற்பட்ட வீடுகள்,இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்தது. இதனையடுத்து வீடுகளை இழந்தவர்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் வெளியிட்டுள்ளார். பா. ஜனதாவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் பால கணபதி, மாவட்ட பார்வையாளர் வெற்றி செல்வன் ஆகியோரின் ஒப்புதலின்படி விருதுநகர் மாவட்டத்தில் புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட  துணைத்தலைவர்களாக ராஜ்குமார், ராமஜெயம், ராஜேஸ்வரி, சங்கரேஸ்வரி, குமரேசன், முருகன், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ராஜா, அழகர்சாமி, சீத்தாராமன், மாவட்டச் செயலாளர்களாக சத்தியபாலன், காளீஸ்வரி, கவுரி, முருகன், பால முருகன், சிவா, மாவட்ட பொருளாளராக புஷ்ப குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கல்லூரி மாணவி கடத்தல்-பெற்றோர் போலீசில் புகார்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது46). இவரது மகள் சித்ரா லட்சுமி (21). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
    சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சித்ரா லட்சுமி திடீரென மாயமா னார். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதுகுறித்தும் முத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த எனது மகளை இந்த கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கடத்திச் சென்றதாக தெரிகிறது.

    எனவே அவரிடம் இருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி