Home /virudhunagar /

மாயமாகும் மாணவிகள்.. இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக பிரமுகர்.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்.!

மாயமாகும் மாணவிகள்.. இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக பிரமுகர்.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்.!

மாதிரி படம்

மாதிரி படம்

Virudhunagar District: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.

    1.சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி

    வைகாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 15-ந்தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகிற 13-ந்தேதி (வெ ள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்க ப்படமாட்டார்கள் என்றும் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

    2.தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்-தாகம் தீர்க்குமா?-எதிர்பார்ப்பில் கிராம மக்கள்..!

    கோடை காலம் தொடங்கியுள்ளதால் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மு.புதூர் கிராம மக்கள் குடிநீர் வசதி இன்றி ஆற்றில் ஊற்று தோண்டி ‌ குடிநீருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கதையாகி உள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் பூமாலை பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எம்.புதூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். ஆற்றில் ஊற்று தோண்டி நீண்ட நேரம் காத்திருந்து அகப்பை மூலம் குடிநீரை இக்கிராம மக்கள் சேகரித்து வருகின்றனர். நாளடைவில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது ஆற்றின் தோண்டப்பட்டு உள்ள ஊற்றுகளில் தண்ணீர் வரத்து குறையத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    பெண்கள் வயதான முதியோர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஊற்று தண்ணீரை சேகரித்து செல்லும் அவலம் தொடர் கதையாகி வருகிறது. இதனால் இப்பகுதி பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து குடிநீரை எடுத்துச் செல்கின்றனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, பல ஆண்டுகளாக தங்களது கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லாததால் ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் அவலம் பல தலைமுறையாக தொடர்கதையாகி வருகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் ஆற்றின் ஊற்றுகளில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. மேலும் நூற்றில் ஒரு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர் கதையாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    3. வருவாய் வட்டங்களின் அடிப்படை எல்லை மறுசீரமைப்பு-பொது மக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுத்துறையில் விருதுநகர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட சார் பதிவகங்கள் வருவாய் வட்டங்களின் அடிப்படை எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம் ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சார்பதிவகங்கள் எல்லை மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேற்படி விவாதத்தில், மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட வேண்டும என பொதுமக்களால் கோரிக்கை மனு அளிக்க ப்பட்டது.

    மேலும் குன்னூர் சார்பதிவகம், வத்திரா யிருப்பு தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுடன் செயல்பட வேண்டுமென பொது மக்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவகத்தில் உள்ள கொங்கலாபுரம் கிராமம், சிவகாசி சார்பதிவகத்துடன் இணைப்பது குறித்து பொதுமக்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    இந்த கிராமம் சிவகாசி சார்பதிவகத்துடன் இணைக்கப்படுவது குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், துணைப்பதிவுத்துறை தலைவர்ஜெகதீசன் (மதுரை), மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சசிகலா (விருதுநகர்), விருதுநகர் பதிவு மாவட்ட அனைத்து சார்பதிவாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    4. தொழிலாளி- இளம்பெண் திடீர் மரணம்-போலீசார் தீவிர விசாரணை

    விருதுநகர் அருகே உள்ள அல்லம் பட்டியைச் சேர்ந்தவர் வேடராஜன் (வயது 31). இவர் வில்லிபுத்தூரில் உள்ள எண்ணெய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையில் இருந்தபோது வேடராஜன் திடீரென மயங்கி விழுந்தார்.
    உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேடராஜன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாரதி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் செல்வி (30). இவருக்கு சம்பவத்தன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    அப்போது மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    5. நெல் அறுவடை பணிகள் தீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி

    வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடைகால சாகுபடி செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் நன்கு விளைந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைகால நெல் அறுவடையை விவசா யிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.
    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகளிலும், அணை பகுதிகளிலும், கண்மாய்களில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் தொடர்ச்சியாக இந்தாண்டு கோடை கால விவசாய பணிகள் தடையின்றி நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனர்.

    6. திருமணமான இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு முக்கிய பிரமுகர் மீது வழக்குப்பதிவு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கவிதா (வயது 28).இவர் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மம்சாபுரம் அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அய்யனார் கடந்த சில மாதங்களாக என்னை பின் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு செய்து வருகிறார். தனது பேச்சை கேட்டு நடக்குமாறு மிரட்டுகிறார். ஆனால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததோடு மறுத்துவிட்டேன்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அய்யனாரின் மனைவி ஜோதியும், தனது கணவர் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுமாறும் இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறு பரப்பி விடுவேன் என மிரட்டினார். எனவே மேற்கண்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அய்யனார், அவரது மனைவி ஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அ.தி.மு.க. நிர்வாகி மீது பாலியல் தொல்லை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    7. இளம் பெண்கள்- பள்ளி , கல்லூரி மாணவிகள் மாயம் குவியும் புகார்கள்

    விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் மாயமாவது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு நாளில் பெண்கள் மாயம் குறித்து குறைந்தது 10 வழக்குகளாவது பதிவாகி வருகின்றன. நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 3 பெண்கள் மாயம் குறித்து புகார்கள் வந்துள்ளன.

    அதன்விபரம் வருமாறு:-

    சிவகாசி புதுத்தெருவைச்சேர்ந்த மாணவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்த மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை.

    இதேபோல் சாத்தூர் இருக்கன்குடி சேர்ந்த மாணவி விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவரும் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த 2 சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அந்த பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்த பெண்ணும் மாயமானார்‌. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கி ன்போது செல்போன் மூலமாக மாணவ, மாணவி களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. இதன் காரணமாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செ ல்போன் அத்தியாவசியமாக தேவைப்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்தனர்.

    ஆனால் அந்த செல்போன் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி அதன் மூலம் முகம் தெரியாத நபர்களுடன் பழகி காதல் வலையில் சிக்கி இளம் பெண்களும், கல்லூரி மாணவிகள் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    விருதுநகரில் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மாயமானது தொடர்பாக போலீசார் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    8. விருதுநகரில் பூட்டிய வீட்டில் 30 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போலீசார் விசாரணை

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மாடன் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மீனாட்சி.மனோகரன் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். போலீசாக வேலை பார்த்து வந்த மீனாட்சி விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை மீனாட்சி தனது வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

    இரவில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மெயின் கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் அறைக்குள் சிதறிக் கிடந்தன. பீரோவுக்குள் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் தங்க நகைகள் மற்றும் 44 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை.

    யாரோ மர்மநபர்கள் மீனாட்சி வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார்.
    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த ரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீனாட்சி வீட்டில் கைவரிசை காட்டியவர்கள், அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அவருக்கு தெரிந்த நபர்கள் யாராவது இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
    மீனாட்சி வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தவரின் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் சூலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீனாட்சி வீட்டிற்கு சற்று தொலைவில் தான், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி