Home /virudhunagar /

பட்டதாரி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

பட்டதாரி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைக்கு தீர்வு காண பொது நல வழக்கு உள்ளிட்ட பல்வேறு செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்.

    1. பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக சேதமடைந்த மக்காச் சோளம் சூரியகாந்தி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை சுமார் 48 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியது. விஞ்ஞான கிராமங்களையும் விவசாயிகள் பகுதிகளையும் கொண்ட பகுதியாகும் இந்தநிலையில் கடந்த வருடத்தில் அறுவடை செய்யவேண்டிய நேரத்தில் மழை பெய்து வீணாகிப்போன பயிருக்கும் அமெரிக்கன் படைபுழு தாக்கி சேதம் அடைந்த மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கும் சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கும் உரிய இழப்பீடு கேட்டு பலமுறை தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை புகார் அளித்தும் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லாததாலும் பயிர்க்காப்பீடு முறையாக விவசாயிகளுக்கு வழங்க மறுக்கும் தோட்டக்கலை மற்றும் விவசாய வேளாண் துறை அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

    எனினும் இது வரை பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசை கண்டித்து இன்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். விவசாயிகளிடம் சாத்தூர் டிஎஸ்பி நாகராஜ் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியலை கைவிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 10 நாட்களுக்குள் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30 கிராமங்களுக்கு மக்காச்சோளம்பயிர் கடன் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

    2. பொதுத்தேர்வு எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயம்

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10-ம் வகுப்பிற்கு அரசு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று காலை வழக்கம்போல் தேர்வு எழுத சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
    வெம்பக் கோட்டை அருகே உள்ள சத்திர ப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள் பி.காம் பட்டதாரி. சம்பவத்தன்று விருதுநகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்வ தாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பாமல் மாயமா னார். இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்ற மாணவி திடீரென மாயமானார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    3. பட்டதாரி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள டி.கரிசல்குளத்தை சேர்ந்தவர் அய்யனார். எம்.காம்., சி.ஏ. முடித்துள்ள இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
    இந்நிலையில் அய்யனார் திருச்சுழி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
    சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த கோகுல், கோபி ஆகியோர் தொலைபேசி மூலம் அறிமுகமானார்கள். அப்போது அவர்கள் மத்திய அரசுத் துறையில் வேலை இருப்பதாகவும் அதனை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினர்.

    மேலும் அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பி 2 பேரிடமும் பல தவணைகளில் ரூ. 10 லட்சத்தில் 900 கொடுத்தேன். பணம் பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை, இதனால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது பிரச்சினை ஏற்பட்டது. மேலும் பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவர் அதில் குறிப்பிடப்ப ட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    4. சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைக்கு தீர்வு காண பொது நல வழக்கு

    போக்சோ சட்டத்திலும், வன்முறை நடக்க வாய்ப்பு இருக்கும் முக்கிய இடங்களான கல்வி கற்கும் இடங்களில் இருக்கும் சிறுமிகளைப் பாதுகாக்க வழிகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்கான வழிகாட்டுதலை வகுத்து தர வேண்டி, உச்சநீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் சார்பில், ராஜபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராம் சங்கர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 10 மாதமாக விசாரணைக்கு வராததால் அவர் கடந்த 13-ம் தேதி தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

    அப்போது நாடு முழுவதும் தினம் பள்ளி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கபட்டு வருவதாக கூறினார். அதனை ஏற்று கொண்ட தலைமை நீதிபதி, இது தொடர்பான வழக்கை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முதல் வழக்காக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர் மனுவில் கூறியிருப்பதாவது:-
    அப்பாவி பள்ளிச் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அவர்கள் கல்வி பயிலும் இடங்களில் அதிகம். வளரிளம் பருவத்தின் மாறுபாடுகள் பற்றி அதிகப் புரிதல் இல்லாத வயதில் உள்ள பள்ளிச் சிறுமிகளை தங்களின் இலக்குக்கு பலியாக்கிடும் போக்கு கல்வி நிலையங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    உச்சநீதிமன்றத்தில் சிறுமிகளின் அடிப்படை உரிமையான கல்வி கற்கும் உரிமையும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வமான அறிவுறுத்தல்களையும், வழிமுறைகளையும் அரசு வழங்கவேண்டியும் இந்தியாவில் உள்ள மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து இந்த பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற கொடுமையான குற்றங்களைக் கண்டுபிடிக்க கல்விநிறுவனங்களில் தனிக்குழு அமைக்கவும், தவறு செய்பவர்களின் மேல் குற்றம் சாட்டவும், போக்சோ சட்டத்தின்படி தண்டிக்கவும் வேண்டிய அறிவுறுத்தல்களை தரும்படி உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டு உள்ளது.இந்த வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுத்தால் , நாடு முழுவதும் இருக்கும் பள்ளி சிறுமிகளுக்குப் மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும்.
    இந்த பொதுநல வழக்கு சிறுமிகளுக்கு எதிரானப் பாலியல் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்கும். பாலியல் குறித்த குற்றச்சாட்டுகள் வெளியாகும்போது, அதனை மூடி மறைக்க முயற்சிப்பதும், அது முடியாவிட்டால், யாரேனும் ஒருவரை சிக்கவைத்துவிட்டு, பள்ளி நிர்வாகங்கள் தப்பித்துக்கொள்வதும் முடிவுக்கு வரும். குற்றம் புரிபவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும், குற்றத்தை மறைக்க முயற்சிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள்.

    5. டீசல் விலையை குறைக்க கோரி முதல்வருக்கு மனு

    விருதுநகர் மாவட்டத்தில் 140 தனியார் பேருந்துகள் உள்ளது. இந்த பேருந்துகளை இயக்க டிரைவர், நடத்துநர், பராமரிப்பு பணியாளர்கள் என உள்ளனர். தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய காரணத்தால் போக்குவரத்து தொழிலை நடத்த பெரும் சிரமமாக உள்ளது. எனவே, டீசல் விலை உயர்வை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து விருதுநகர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் பி.டி மகாலிங்கம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 100 வருடங்களாக போக்குவரத்து தொழில் செய்து வருகிறோம். தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு, போன்ற காரணத்தால் தொடர்ந்து தொழில் நடத்த பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 4,500 தனியார் பேருந்துகளை நம்பி உள்ள தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியோ, அல்லது டீசல் விலையை குறைத்தோ, நலிந்துவரும் போக்குவரத்து தொழிலை மேம்படுத்தி அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களையும் மற்றும் பஸ் உரிமையாளர்களையும் பாதுகாக்க வேண்டுமென கூறினார். இதுகுறித்து முதல்வர் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

    6. பீரோவை உடைத்து நகைகள் கொள்ளை

    திருவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனி மாலதி (45). இவரது தந்தை கீழப்பட்டி காளியம்மன் தெரு பகுதியில் வசித்து வருகிறார். தற்போது சென்னையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாலதி மகள் கோகிலா, தன் தாத்தா வீட்டுக்குச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் திருவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி